face wrinkles home remedies

Face Wrinkles : முக சுருக்கத்தை சரிசெய்ய என்ன செய்ய தெரியுமா?

முகத்தில் ஏற்படும்  முக சுருக்கங்களை சரிசெய்ய உதவும் எளிய குறிப்புகள் பற்றி இந்த பதிவில்  பார்ப்போம். குளிர்காலத்தில் இந்த முக சுருக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-04-30, 16:10 IST

எல்லா சீசனிலும் சருமத்தை ஈரப்பதமாக்குவது மிகவும் அவசியமான ஒன்று. இதனால் சருமத்தில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றின் காரணமாக சருமம் மிகவும் வறண்டு போகும். இதற்கு தினமும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

மசாஜ் செய்யுங்கள்

குளிர்காலத்தில் சருமம் பளபளப்பாக இருக்க, தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். பெரும்பாலானோர் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்கவே அதிகம் விரும்புகிறார்கள், ஆனால் அதிக சூடான நீரால் சருமம் வறண்டு போகும் என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. எனவே, குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:முகத்திற்கு தினமும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாமா? கூடாதா?

face beauty tips

பால் மற்றும் பாதாம்

பால் மற்றும் பாதாம் இயற்கை ஊட்டச்சத்தை வழங்குவதோடு சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது. இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுவதால் புள்ளிகள் குறைந்து சருமம் மென்மையாகும். இந்த பருவத்தில் சருமத்தை உரித்து அழுக்குகளை வெளியேற்றுவது மிகவும் அவசியம். அதற்கு, வீட்டிலேயே ஸ்க்ரப் தயார் செய்யலாம். கிரீம், சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்க்ரப்பை தயாரித்து பயன்படுத்துங்கள்.

women wrinkles

செய்ய வேண்டியவை

  • குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காது. அதற்காக தண்ணீரைக் குறைவாக குடிக்கக்கூடாது. இது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி வயிற்று எரிச்சலையும் உண்டாக்கும்.
  • குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாக வைத்திருக்க ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை கலந்து தடவவும். இதனால் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:ஐப்ரோ எடுத்த பின்பு அதிகம் வலிக்கிறதா? இதை செய்யுங்கள்

எனவே, நீங்களும் இந்த குறிப்புகளை மனதில் கொண்டு குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாத்திடுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com