
கூந்தல் அழகை நினைத்துக் கவலை கொள்ளாத பெண்களே இல்லை. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி வெடிப்பு, அடர்த்தி குறைந்த முடி போன்ற முடி தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே நேரம் கடைகளில் விற்கப்படும் அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்பு, சீரம், கண்டிஷனர் போன்ற தயாரிப்புகளும் முடி உதிர்வுக்கு காரணமாகின்றன.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல தூக்கம், சரியான வைத்தியம் ஆகியவற்றால் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம். இதை எல்லாம் முயற்சி செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு முன்பே பாதி முடி கொட்டி விட்டது எனக் கவலைப்படும் பெண்களும் இங்கு உண்டு. அவர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதம் தான் "ஹேர் எக்ஸ்டென்ஷன்". இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விவரிக்கிறார் அழகுகலை நிபுணர் மேனகா ராம்குமார்.
முடியை அடர்த்தியாகக் காட்ட ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் சினிமா நடிகைகள் திரைப்படங்களில் முடியை அடர்த்தியாகவும் அழகாகவும் காட்ட இதை பயன்படுத்தினர். ஆனால் தற்போது ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாகக் காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம். முடி அதிகம் உதிர்ந்து காலியாக இருக்கும் இடத்தை ஹேர் எக்ஸ்டென்ஷன் உதவியுடன் மறைக்கலாம். முன் பகுதியில் முடி அதிகம் உதிர்ந்து மண்டை தெரிந்தாலோ, பின் புறத்தில் சொட்டை விழுந்தாலோ அந்த இடத்தை ஹேர் எக்ஸ்டென்ஷன் மூலம் மறைக்க முடியும். பார்ப்பதற்கு அச்சு அசல் உங்க முடி போலவே தோற்றம் தரும். வித்தியாசம் கண்டுப்பிடிக்க முடியாது.
இந்த பதிவும் உதவலாம்: முடியின் நுனியில் வெடிப்பா? கற்றாழை ஜெல் கொண்டு சரி செய்யலாம்!
பல மாதங்களாக, சொல்லப்போனால் பல வருடங்களாக ஒரே ஹேர் ஸ்டைலில் தலை வாருவது, தொடர்ச்சியாக ஒரே மாதிரி முன் வகிடு, சைடு வகிடு எடுப்பதே முன் பகுதியில் அதிக முடி உதிர்தலுக்கு காரணம் என மேனகா ராம்குமார் குறிப்பிடுகிறார். எனவே முடிந்த வரை குறைந்தது 2 வாரங்களுக்கு ஒருமுறையாவது ஹேர் ஸ்டலை மாற்றுவது நல்லது என்கிறார்.

ஹேர் எக்ஸ்டென்ஷனில் பல வகையுண்டு. நீளம், அடர்த்தி, அதிக எடை, சில்கி ஹேர் எனப் பல வகைகளில் அனைத்து விதமான கூந்தலுக்கும் பொருந்தக்கூடிய ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் உங்கள் தலைமுடிக்கு பொருந்தக்கூடிய ஹேர் எக்ஸ்டென்ஷனை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். குறிப்பாக உங்கள் முடியின் நிறத்திலே அது இருக்க வேண்டும். பார்ப்பதற்கு இயற்கையான முடி போன்ற தோற்றத்தைத் தர வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு ஹேர் எக்ஸ்டென்ஷன்களை வாங்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் முடியை அலங்கரிக்க அருமையான டிப்ஸ்!!!
முடியை அதிக அடர்த்தியாகக் காட்ட அதிக எடையுடன் இருக்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை வாங்காதீர்கள். இதை அதிக நேரம் தலையில் வைத்திருக்கும் போது கழுத்து வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து ஒரே மாதிரியான ஹேர் எக்ஸ்டென்ஷன்களை ஒட்ட வைக்கக் கூடாது. இதனால் அந்த பகுதியில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம்.
எந்தவித தயக்கமும் பயமுமின்றி எல்லா பெண்களும் தாரளமாக ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தலாம். இது முடிக்கு அழகை தருவதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்வை நினைத்துக் கவலைப்படுபவர்களுக்கு ஒருவிதமான தன்னம்பிக்கையும் தருகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com