hairstyle with more beauty

உங்கள் முடியை அலங்கரிக்க அருமையான டிப்ஸ்!!!

உங்கள் ஹேர் ஸ்டைல் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ்.
Editorial
Updated:- 2022-12-09, 09:00 IST

ஹேர் ஸ்டைல் சரியாக அமைந்துவிட்டால் போதும், கண்டிப்பாகக் கூட்டத்திலும் தனித்து நிற்போம். ஒவ்வொரு பண்டிகை மற்றும் திருமணத்திலும் நாம் அனைவரும் அழகாக இருக்க விரும்புகிறோம். இதற்காக, ஆடை முதல் மேக்கப் வரை அனைத்தையும் ஸ்டைலாக அணிந்துகொள்கிறோம். அதே போல அழகான தோற்றத்திற்கு ஹேர் ஸ்டைலும் மிகவும் முக்கியம்.

உங்களை மேலும் அழகாக மாற்ற, உங்கள் ஹேர்ஸ்டைலை ஸ்டைலிஷாக மாற்ற உதவும் சிகை அலங்கார பொருட்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

நகை பாணியில் இருக்கும் சிகை அலங்கார பொருட்கள்

jewelry style hair accessories

இது போன்ற ஃபேஷன் எல்லா காலகட்டத்திலும் அழகாக இருக்கும். இந்த வகை தலைமுடிக்கான அணிகலன்கள் ராஜா காலத்திலிருந்து அணியப்படுகின்றன. இதன் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.500 வரையில் இவற்றை பெற முடியும்.

குறிப்பு: இந்த வகை சிகை அணிகலன்களை லெஹங்காவுடன் அணிந்தால், மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ரிப்பன் பாணி சிகை அலங்கார பொருட்கள்

சுமார் ரூ.50 முதல் ரூ.300 வரையில், இது போன்ற சிகை அலங்காரப் பொருட்களை எளிதாகப் பெற முடியும். சாதாரண பின்னல் முதல் மீன் பின்னல் வரை எதுவாக இருந்தாலும் சரி இது போன்ற சிகை அலங்கார பொருட்களைப் பயன்படுத்தி மேலும் அழுகு சேர்க்கலாம்.

குறிப்பு: முன் பக்க ஹேர் ஸ்டைல்களுக்கும் இது போன்ற சிகை அலங்கார பொருட்களை முயற்சி செய்யலாம். இதை உங்களுக்கு விருப்பமான முறையில் வித்யாசமாகவும் பயன்படுத்தலாம்.

பூ சிகை அலங்காரப் பொருட்கள்

floral hair accessories

இதை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்றப் பல வகையான வண்ணங்களில் எளிதாகப் பெற முடியும். ரூ.100 முதல் ரூ.300 வரையில், இது போன்ற சிகை அலங்கார பொருட்களை எளிதாகப் பெறலாம்.

குறிப்பு: ஸ்டைலான தோற்றத்திற்கு, பூச்சரங்களால் உங்கள் பின்னலை அலங்கரிக்கலாம். திருமணத்திற்கு முன் நடக்க கூடிய மெஹெந்தி போன்ற கொண்டாட்டங்களுக்கு இதை முயற்சிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com