reduce the problem of split end

முடியின் நுனியில் வெடிப்பா? கற்றாழை ஜெல் கொண்டு சரி செய்யலாம்!

தலைமுடியின் நுனி பகுதி வெடிப்பினால்  சிரமப்படுகிறீர்கள் என்றால், கற்றாழை ஜெல் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
Expert
Updated:- 2022-12-12, 16:00 IST

கற்றாழை ஜெல்லுடன் நம் வீட்டில் எளிதாக கிடைக்ககூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி முடி வெடிப்பு பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

முடியை அழகாக்க நாம் அனைவரும் நிறைய முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான தலைமுடியை பெறுவது மிகவும் கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கடைகளில் கிடைக்கும் தலைமுடி தயாரிப்புகள் முடியின் மோசமான நிலையை மேம்படுத்த சிறிது உதவுகின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்துவதை நாம் நிறுத்தியவுடன், தலைமுடி மீண்டும் அதே நிலைக்கு மாறிவிடுகிறது.

எனவே, உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நீங்கள் சிகிச்சை அளிக்க விரும்பினால், அதற்கு கற்றாழை ஜெல் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக நீங்கள் முடியின் நுனி பகுதி வெடிப்பு பிரச்சனையை எதிர்கொண்டால், கற்றாழை ஜெல் அவற்றை மேம்படுத்த உங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இது குறித்து அழகியல் நிபுணரான பூனம் சுக்கிடம் பேசினோம். அவர் கூறியதாவது, முடியில் வெடிப்பு இருந்தால், கீழ் பகுதியை மட்டும் கொஞ்சமாக வெட்டி விட வேண்டும், ஒவ்வொரு மாதமும் இவ்வாறு செய்ய வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் இந்த பிரச்சனை வருவதை தவிர்க்க கற்றாழை ஜெல் தான் சிறந்த தீர்வு.

தலைமுடி வெடிப்பை சரிசெய்ய சில பயனுள்ள குறிப்புகளையும் பூனம் நமக்கு வழங்கியுள்ளார்.

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்

aloe vera to reduce the problem of split end

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • கற்றாழை ஜெல்லில் தேங்காய் எண்ணெயை கலந்து, இந்த கலவையை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவவும்.
  • இதற்குப் பிறகு, ஒரு துண்டை வெந்நீரில் நனைத்து, அந்தத் துண்டால் முடியைக் கட்டி சிறிது நேரம் விடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு முடியை அவிழ்த்துவிடவும்.
  • பிறகு நீங்கள் விரும்பிய ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசவும்.
  • இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, தலைமுடி வெடிப்பு பிரச்சனையும் குறையும்.

இந்த பதிவும் உதவலாம்: கற்றாழை பயன்படுத்தி இயற்கையான வழியில் முடியை ஸ்ட்ராங் ஆக்குவது எப்படி?

கற்றாழை ஜெல் மற்றும் தேன்

girl feeling bad due to split end

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்- 2 டேபிள் ஸ்பூன்
  • தேன்- 1 டேபிள் ஸ்பூன்
  • வைட்டமின்-E கேப்ஸ்யூல் - 1

செய்முறை

  • கற்றாழை ஜெல், தேன் மற்றும் வைட்டமின்-E கேப்ஸ்யூல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • அவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் இந்த கலவையை முடியில் நன்கு தடவவும்.
  • பின்பு 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசவும்.
  • வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த குறிப்பை பின்பற்றி வந்தால், முடியின் வறட்சி குறைவதுடன், முடி வெடிப்பு பிரச்சனையும் சரியாகிவிடும்.

இந்த பதிவும் உதவலாம்: நரைத்த முடி பற்றிய கவலையா? எனில், இந்த வீட்டு வைத்தியத்தை முயன்று பாருங்களேன்!

பால் மற்றும் கற்றாழை ஜெல்

girl with healthy hair

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்- 3 டேபிள் ஸ்பூன்
  • பால்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையை தலைமுடியில் நன்றாக தடவி 1 மணி நேரம் கழித்து ஷாம்பூவைக் கொண்டு முடியை அலசவும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் நல்ல பலன்களை உடனே காணமுடியும்.
  • இந்தக் கலவையை தடவி வரும் போது கூந்தல் மிருதுவாகவும், பட்டுப் போலவும் மாறுவதை உணர்வீர்கள், முடி வெடிப்பு பிரச்சனையும் நன்கு குறையும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com