இரவு கால்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தால் சருமத்தில் பல அதிசயங்கள் நடக்கும்

பாதங்கள் உடலின் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. இருப்பினும் இரவில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

Coconut oil on feet Ayurveda

நம் உடலின் முழு எடையையும் பாதங்கள் நிர்வகிக்கின்றன என்பதை அறிந்திருந்தாலும், கால்களை சுத்தம் செய்யமாக் புறக்கணிக்கிறோம். மேலும் பாதங்கள் தூசி மற்றும் அழுக்குகளை அதிகமாஜ சேகரித்து குதிகால் வெடிப்பு மற்றும் மந்தமான பாதங்களுக்கு வழிவகுக்கும். பல்வேறு வகையான கால் பராமரிப்பு பொருட்கள் கிடைக்கும் மத்தியில், தேங்காய் எண்ணெய் பல நன்மைகளுடன் சிறந்த மூலப்பொருளாக விளங்குகிறது. ஒரே இரவில் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவுவதன் மூலம் நீங்கள் எவ்வாறு பயனடையலாம் என்பதை பார்க்கலாம்.

மென்மையான பாதங்கள் மற்றும் ஆரோக்கியமான நகங்கள்

 feet oil massage inside

அதிகமாக குளிர்காலத்தில் நமது பாதங்கள் கரடுமுரடான மற்றும் விரிசல் அடைகின்றன. எனவே நம் கால்களுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகின்றாது. தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இயற்கை புரதம் நிறைந்துள்ளதால் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகின்றது. வழக்கமான எண்ணெய் மசாஜ் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. வெடிப்புகளைத் தடுக்கிறது மற்றும் பாதங்களை மென்மையாக்க செய்கிறது.

ஆரோக்கியமான பாதங்கள்

தேங்காய் எண்ணெய் மசாஜ் கால்களின் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உணவு பிரச்சனைகளை தடுக்கிறது. இது பாதத்தைச் சுற்றியுள்ள கால் தசைகளை வலுவாக்கி வலியைக் குறைக்கிறது.

தொற்றுநோயைத் தடுக்கிறது

வீட்டு வெளியே தேங்கியிருக்கும் தண்ணீரால் நமது பாதங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு ஆளாகின்றன. இரவில் வழக்கமான தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வதால் தொற்றுகளை தடுக்க முடியும். தேசிய மருத்துவ நூலகத்தின் படி தேங்காய் எண்ணெய் அரிக்கும் தோலழற்சி, ஆணி பூஞ்சை, ரிங்வோர்ம் மற்றும் பாதங்களில் சிவத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் ஒரு கவசமாக செயல்படுகிறது.

இயற்கையான டியோடரண்டாக

துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாவின் விளைவாக நமது பாதங்கள் துர்நாற்றத்தை உருவாக்கும். இரவில் தேங்காய் எண்ணெயை தவறாமல் தடவுவது பாதங்களில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் தொல்லையைத் தடுக்கிறது.

மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது

 feet oil massage new inside

படுக்கை நேரத்தில் கால் மசாஜ் செய்வது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒரு எளிய 5 நிமிட கால் மசாஜ் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாத மசாஜ் செய்வது, கால்களின் அடிப்பகுதியில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளை செயல்படுத்துகிறது. இது உடல் பதற்றம், மன அழுத்தம் மற்றும் தேவையற்ற பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கிறது.

ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது

மேலும் படிக்க: கழுத்தில் இருக்கும் கருமையை நீக்கி சங்கு போன்ற கழுத்துக்கு வீட்டு வைத்தியம்

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி தேங்காய் எண்ணெயுடன் கால் மசாஜ் செய்வதால் சோர்வைக் குறைக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP