பொதுவாக சிப்ஸ், ஃப்ரென்ச் ஃப்ரைஸ் என உருளைக்கிழங்கை எந்த வடிவில் கொடுத்தாலும், நாம் விரும்பி சாப்பிடுவோம். ஆனால், அதே உருளைக்கிழங்கை கொண்டு வித்தியாசமான ஃபேஸ்பேக் தயாரித்து நமது சருமத்தை பொலிவாக மாற்ற முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
மேலும் படிக்க: முடி உதிர்வா? கவலை வேண்டாம், உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பர் உணவுகள்!
குறிப்பாக, உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பி6, பி1 மற்றும் பி3 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பளபளப்பான மற்றும் பொலிவான சருமத்தை பெற உதவுகின்றன. அதனடிப்படையில் உருளைக்கிழங்கை கொண்டு எவ்வாறு ஃபேஸ்பேக் செய்யலாம் என்று இதில் பார்க்கலாம்.
மூன்று தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாறுடன், இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து, முகத்திலும் கழுத்திலும் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். சுருக்கங்கள் இல்லாத சருமத்தை பெற, இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் ஆற்றல் உருளைக்கிழங்கு சாறில் இருக்கிறது. மேலும், தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இரண்டு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாறுடன், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இது சருமத்தில் சுரக்கும் அதிகமான எண்ணெய்யை கட்டுப்படுத்த உதவும். மேலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் பயன்படுகிறது.
மேலும் படிக்க: இளமையான தோற்றத்தை அளிக்கும் கொலஜன் நிறைந்த உணவுகள்; சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இவற்றை சாப்பிடவும்
நன்றாக துருவிய ஒரு உருளைக்கிழங்குடன், ஒன்றரை தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். மஞ்சளில் உள்ள பாக்டீரியா தடுப்பு பண்புகள், சருமத்தை பாதுகாப்பாக பராமரிக்கிறது. இது கருமையையும் குறைக்கிறது.
அரைத்த உருளைக்கிழங்கு, இரண்டு துருவிய ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஒன்றரை தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவலாம். பின்னர், முகத்தை நன்கு கழுவி விடவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள கொலஜன், இளமையான தோற்றத்தை பெற உதவுகிறது.
முட்டை வெள்ளைக்கருவை முகத்தில் தடவும்போது, அதன் மனம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்யலாம். அரை ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம். முட்டை மற்றும் உருளைக்கிழங்கில் உள்ள புரதச்சத்து, சருமத்தை இறுக்கி, முகத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி, உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் சருமத்தை பொலிவாகவும் மாற்ற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com