முடி உதிர்வு என்பது இன்றைய காலத்தில் பல பெண்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. வேதிப்பொருட்கள் நிறைந்த ஷாம்பூக்கள், சுற்றுசூழல் மாசு, மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. டீ குடித்தால் முடி வளரும் என்பது உங்களுக்கு தெரியுமா? தேநீர் முடி வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், முடி உதிர்வையும் தடுக்கும். தேநீரில் ஏராளமான வகைகள் உள்ளன. பொதுவாக இஞ்சி டீ, ஏலக்காய் டீ நம் உடலை புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவும். அதேபோல ஒரு சில டீ வகைகள் சளி, காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக செயல்படும். அந்த வரிசையில் தலைமுடி பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை தீர்வுகளில் ஒன்று ரோஸ்மேரி டீ. இந்த தேயிலை முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, முடி உதிர்வை குறைக்கிறது மற்றும் தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
ரோஸ்மேரி ஒரு மணமுள்ள மூலிகைச் செடியாகும், இது நீண்ட காலமாக மருத்துவம் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோஸ்மேரி டீ முடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
ரோஸ்மேரி டீ தலையின் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. இது முடி வேருக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் முடி உதிர்வது குறைகிறது.
DHT (Dihydrotestosterone) என்பது ஒரு ஹார்மோன், இது முடி உதிர்வை தூண்டுகிறது. ரோஸ்மேரி தேயிலை DHT உற்பத்தியை குறைத்து, உங்கள் முடி வேரை பலப்படுத்துகிறது.
இந்த ரோஸ்மேரி டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வேர்களின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது புதிய முடி முளைப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் முடியின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: ஹேர் கலரிங் செய்வது ஆபத்தா? உங்கள் முடிக்கு என்ன ஆகும் தெரிஞ்சிக்கோங்க
ரோஸ்மேரி தேயிலை தோல் எரிச்சல், பொடுகு மற்றும் பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்துகிறது. இது உச்சந்தலை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ரோஸ்மேரி எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தலையில் மசாஜ் செய்யலாம். இது முடி வேரை பலப்படுத்தும்.
ரோஸ்மேரி டீ முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். இது எந்த பக்க விளைவுகளும் இல்லாமல், முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எனவே, உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் ரோஸ்மேரி டீயை சேர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் ஆரோக்கியமான, அடர்த்தியான முடிகளை பெறுங்கள்.
Image credits: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com