இன்றைய காலத்தில் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளால் முடி உதிர்தல், முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் அனைவரிடமும் பொதுவாகக் காணப்படுகின்றன. அதேபோல பெண்களிடையே ஹேர் கலரிங் செய்வதும் அதிகரித்து வருகிறது. கருப்பு முடி என்பது ஓல்டு ஃபேஷன் என்று கருதப்படுகிறது. சிவப்பு நீளம் பச்சை என புதிய நிறங்களில் முடியை கலர் செய்வது பேஷன் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஹேர் கலரிங் செய்வதால் நம் தலைமுடிக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நம் முடியை கலர் செய்தால் என்ன ஆகும் என்றும் அதை பராமரிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தலைமுடிக்கு கலர்:
சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும் தற்காலிக ஹேர் கலரிங் மற்றும் நிரந்தர ஹேர் கலரிங் போன்றவை சந்தையில் கிடைக்கின்றன. இதனுடன் தொடர்புடைய பல்வேறு பொருட்களும், விளம்பரங்களும் வந்துள்ளன. இந்த ஹேர் கலரிங் செய்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பல கட்டுக்கதைகள் உள்ளது.
முடியின் இயற்கை நிறம்:
பொதுவாக, நமது முடியின் இயற்கை நிறத்தைப் பொறுத்தே ஹேர் கலரிங் செய்ய வேண்டும். உதாரணமாக, கருப்பு நிற முடி உள்ளவர்கள் லைட் பிரவுன் அல்லது ஹனி பிரவுன் போன்ற லேசான நிறங்களில் முடியை அழகுபடுத்தலாம்.
ஹேர் கலரிங் பக்க விளைவுகள்:
ஹேர் கலரிங் செய்யும்போது இயற்கை நிறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிறங்களைத் தேர்ந்தெடுத்தால், பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம்: அலர்ஜி, முடி அடர்த்தி குறைதல், முகம் கறுத்துப்போதல், கண் பாதிப்பு, தோல் எரிச்சல் ஏற்படலாம். இதனால் உடல் மட்டுமல்ல, மனரீதியான பாதிப்பும் ஏற்படலாம். நிரந்தர ஹேர் கலரிங் செய்தவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், மீண்டும் முன்பு இருந்த கருப்பு நிறத்தை முழுமையாகப் பெற முடியாது. இது குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம்.
மேலும் படிக்க: ஜொலிக்கும் சருமத்திற்கு ஆட்டுப்பால்; தினமும் இரவு இப்படி யூஸ் பண்ணுங்க
வீட்டில் டை அடிப்பது:
நரைத்த முடி உள்ளவர்கள் வீட்டிலேயே டை அடிப்பது இன்று பொதுவானது. இதற்கான பொருட்களும் சந்தையில் கிடைக்கின்றன. டை அடிப்பதும் ஹேர் கலரிங் செய்வதும் ஒரே மாதிரியானவை. இதை வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்யலாம். ஆனால், டை அடித்த பிறகு உங்கள் கூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது கட்டாயம். தலைமுடி ஆரோக்கியமாக இருக்க மாதத்தில் ஒருமுறையாவது ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கலர் செய்யும்போது தலையில் வழுக்கை உள்ள இடத்தில் இந்த இரசாயனங்கள் பட்டால், தோல் அலர்ஜி ஏற்படலாம். இதற்கு உயர்தர ஹேர் கலர் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், தலை முடியின் நிலை மோசமடையும்.
சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்:
பகல் நேரத்தில் வெளியில் செல்லும்போது, சூரியனின் புற ஊதா கதிர்கள் முடியின் நிறத்தை விரைவாக மங்கிப்போக செய்யும். சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது போல, முடியைப் பாதுகாக்க ஹேர் ப்ரொடக்டிவ் சீரம்கள் உள்ளன. இருப்பினும், எளிய முறையாக தொப்பி அல்லது குடை பயன்படுத்தலாம்.
ஹேர் கலரிங் செய்வது ஃபேஷனாக இருந்தாலும், அதன் பக்க விளைவுகளைப் பற்றி அறிந்து செயல்படுவது அவசியம். தரமான பொருட்களைப் பயன்படுத்துதல், சரியான பராமரிப்பு மற்றும் கவனம் ஆகியவற்றைப் பின்பற்றினால், உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
Image credits: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation