சுருக்கங்கள் இல்லாத பொலிவான முகத்தை பெற வேண்டுமா? இந்த பப்பாளி ஃபேஸ் பேக்கினை போடலாம்!

  • உங்களுக்கும் முகத்தில் சுருக்கங்கள் உள்ளதா? இந்த பதிவை படித்தறிந்து பயன்பெறலாம்.
papaya face pack big
papaya face pack big

சுருக்கம் இல்லாத சருமம் பெற பெண்கள் என்னென்னவோ முயற்சி செய்திருப்பார்கள். இதற்கு, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்கள் முதல், பல வகையான சிகிச்சைகள் வரை என பலவற்றை முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் செய்த பிறகும் கூட முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதில்லை. முகத்தில் தோன்றும் சுருக்கத்திற்கு நம் வாழ்க்கை முறை கூட ஒரு காரணம் தான். எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய, சரும பராமரிப்போடு, ஆரோக்கியமான உணவுமுறையும் மிகவும் அவசியம். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட நீங்கள் வீட்டு வைத்தியம் கூட செய்து பார்க்கலாம். இதற்காக, நீங்கள் பப்பாளி ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இது சுருக்கங்களை குறைப்பதோடு, முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. வீட்டிலேயே எளிதாக இந்த ஃபேஸ் பேக்கை செய்யலாம்.

இப்போது, வீட்டிலேயே சுலபமாக பப்பாளி ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

பப்பாளியின் நன்மைகள்

papaya face pack

பப்பாளியில் வைட்டமின் A, C மற்றும் தாதுக்கள் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் பொட்டாசியம் உள்ளது, இது சருமத்தின் வறட்சியை நீக்குகிறது. அதோடு, இதனில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்பு, முக சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. பப்பாளி சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் மாற்ற பயன்படுகிறது. இவற்றை தவிர, இதில் பாப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் பிற குறைபாடுகளை அகற்ற உதவுகிறது.

பப்பாளி மற்றும் பால் ஃபேஸ் பேக்

papaya face pack

தேவையான பொருட்கள்

  • பப்பாளி துண்டுகள் - 5 அல்லது 6
  • பால் - 1 கப் (சிறியது)
  • தேன் - 1 டீஸ்பூன்

எப்படி செய்வது

  • முதலில் பப்பாளியையும் பாலையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கலந்துக்கொள்ளவும்.
  • அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் அதனை கொட்டி, தேன் கலந்து பேஸ்ட் செய்துகொள்ளவும்.
  • அவ்வளவு தான், வீட்டு ஃபேஸ் பேக் இதோ ரெடி.

பயன்படுத்தும் முறை

  • இதைப் பயன்படுத்த, முதலில் முகத்தை நன்கு கழுவவும்.
  • இப்போது இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவவும்.
  • சுமார் 25 நிமிடங்கள் கழித்து அது காய்ந்ததும் முகத்தை அலசவும்.

பப்பாளி மற்றும் கற்றாழை ஜெல் ஃபேஸ் மாஸ்க்

papaya face pack

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழ துண்டுகள் - 5 அல்லது 6
  • கற்றாழை ஜெல் - 1 சிறிய கப்
  • கிரீம் - 1 டீஸ்பூன்

எப்படி செய்வது

  • முதலில் பப்பாளியை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் கிரீம் சேர்க்கவும்.
  • இப்போது அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

  • முதலில் முகத்தை நன்றாக கழுவவும்.
  • இப்போது இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி, அது காய்ந்ததும், அலசவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழ துண்டுகள் - 5 அல்லது 6
  • கற்றாழை ஜெல் - 1 சிறிய கப்
  • கிரீம் - 1 டீஸ்பூன்

எப்படி செய்வது

  • முதலில் பப்பாளியை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் கற்றாழை ஜெல் மற்றும் கிரீம் சேர்க்கவும்.
  • இப்போது அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

  • முதலில் முகத்தை நன்றாக கழுவவும்.
  • இப்போது இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி, அது காய்ந்ததும், அலசவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik, Herzindagi

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP