தலைமுடி சேதங்கள் இல்லாமல் ஒரு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கும் பெண்கள் அதிகம். முடி உதிர்தல், வெள்ளை முடி, வறண்ட கூந்தல், அதிக எண்ணெய், இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள். நம் தலைமுடி செழிப்பாக இருந்தாலும், அதை அப்படியே பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கே, குறிப்பாக உங்களுக்கு முடி வளர்ச்சியில் பிரச்சனைகள் இருந்தால் இந்த சில டானிக்குகள் அல்லது ஜூஸ்கள் முடி பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும்.
மேலும் படிக்க: திருமணநாளில் பெண்களின் முகம் பட்டு போல் தகதகவென ஜொலிக்க வீட்டில் செய்யப்பட்ட ஸ்க்ரப்
பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறு ஒட்டுமொத்த மனித உடலுக்கும் நல்லது. உருளைக்கிழங்கின் சாற்றில் வைட்டமின் சி, துத்தநாகம், பீட்டா கரோட்டின், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் உச்சந்தலையில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. உருளைக்கிழங்கு pH அளவை சீராக வைத்து பொடுகு வராமல் தடுக்கிறது. முடி உதிர்தலையும் நிறுத்துகிறது.
Image Credit: Freepik
நெல்லிக்காய் சாறு தலைமுடிக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது உச்சந்தலை மற்றும் முடிக்கு சிறந்தது. நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி நிறைந்தது மற்றும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகவும் அறியப்படுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் முடி உதிர்வை மிக வேகமாக தடுக்கிறது. இது மட்டுமின்றி, முன்கூட்டியே நரையைத் தடுக்க செய்கிறது. ஈஸ்ட் தொற்று மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், சாற்றை தினமும் குடித்து வரலாம்.
கேரட் சாறு முடி வளர்ச்சிக்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. கேரட்டின் சாற்றில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால். இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள் தலையின் உயிரணுக்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கின்றன. கேரட் சாற்றில் வைட்டமின்கள் உள்ளதால் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை குணப்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை தடுக்கிறது.
Image Credit: Freepik
மேலும் படிக்க: உப்பு தண்ணீரில் முகம் கழுவுவதால் தெளிவாகவும், பொலிவாகவும் சருமம் பிரகாசிக்கும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com