ஒரு சிலருக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி தலைமுடி கொத்துக்கொத்தாக கொட்டி கொண்டு இருக்கும். இன்னும் சிலருக்கு தலைமுடி இருந்தாலும் அடர்த்தி இல்லாமலும் நீளம் இல்லாமலும் இருக்கும். பொடுகு, அரிப்பு, இளநரை போன்ற பிரச்சனைகளாலும் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியங்கள் எப்போதும் உங்களுக்கு உதவும். அந்த வரிசையில் தலைமுடி பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்த அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெந்தயம் இருந்தால் போதும், இப்படி செய்து பாருங்கள்.
இந்த அரிசி கழுவிய தண்ணீரில் அதிக அளவு வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது அதிக முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது. இது உங்கள் தலைமுடியை மென்மையாக்கும் மற்றும் வேகமாக வளர உதவும். முடியை வலிமையாக்கவும் முடி கொட்டுவதை தடுக்கவும் அரிசி கழுவிய தண்ணீர் பெரிதும் உதவுகிறது.
முதலில் இரண்டு டம்ளர் அளவுக்கு இந்த அரிசி கழுவிய தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் வெந்தயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெந்தயத்தை முதல் நாளே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் இரண்டு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். முடி கொட்டுவது, பொடுகு தொல்லை, தலையில் வழுக்கை, முடி மெலிதாவது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும் சத்து இதில் இருக்கு. இதை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது ரொம்ப பொடியாக அரையாது கொஞ்சம் குறை குறைப்பா தான் இருக்கும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள இரண்டு டம்ளர் அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்துக்கொண்டு இரண்டு ஸ்பூன் அரைத்த வெந்தயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இது கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெந்தயம் இரண்டும் முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்கும், முடியை அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர உதவும், பொடுகு பிரச்சனை மற்றும் அனைத்து தலைமுடி பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.
நன்கு கொதிக்க வைத்த அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெந்தய விழுதை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சூடாக இருக்கும் போதே வடிகட்ட வேண்டும் இல்லை என்றால் ரொம்ப இறுகி போய்விடும். இப்படி வடிகட்டிய பிறகு மீதமுள்ள வெந்தய விழுதை அப்படியே தூக்கிப் போடாமல் அதை முகத்தில் முகப்பருக்கள் உள்ள பகுதியில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறைய செய்யும். அதேப்போல கரும்புள்ளிகள் கூட குணமாகும். இதனைத் தொடர்ந்து நாம் வடிகட்டி வைத்த இதில் வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுத்து அதன் உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதோடு சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். விளக்கெண்ணெய் அதிகமான குளிர்ச்சி தரும் என்பதால் சில பேருக்கு ஒத்துக்காது. அப்படி ஒத்துக்காதவங்க விளக்கெண்ணைக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: கொத்து கொத்தாக முடி கொட்டுதா? இனி இந்த ஷாம்பூவை வீட்டில் செய்து யூஸ் பண்ணுங்க
தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். இதையெல்லாம் நன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இப்போது இதை உங்கள் தலையில் தேய்த்து 10 நிமிடம் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதற்கு பிறகு அரை மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு அல்லது சீக்காய் போட்டு நன்றாக கழுவி கொள்ளுங்கள். வாரத்துக்கு இரண்டு நாள் இதை பயன்படுத்தி வந்தால் அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளும் குணமாகும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com