herzindagi
image

பெண்களின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி ஒன்று போதும்; பயன்படுத்தும் முறை இதோ!

பெண்களின் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் செம்பருத்தி இலை மற்றும் பூக்களுடன் சில பொருட்களைப் பயன்படுத்தி ஹேர் பேக் செய்துப் பயன்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-10-31, 23:29 IST

பெண்கள் தங்களது சருமத்தை அழகாகக் காட்டுவதற்கு எந்தளவிற்கு மெனக்கெடுகிறார்களோ? அதை விட அதிகமாக தங்களுடைய தலைமுடி வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகப்படியான மாசு, தலையின் பொடுகு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தலைமுடி உதிர்வு, கூந்தல் வலுவிழப்பு போன்ற பல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் கடைகளில் இராசயனம் கலந்த ஷாம்புகள் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்கும் ஹேர் பேக்குகளைப் பயன்படுத்தவும். இதற்கு விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. வீட்டில் உள்ள செம்பருத்தி மற்றும் அத்தியாவசிய சில பொருட்கள் போதும். இதோ எப்படி தயார் செய்ய வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தி இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் செம்பருத்தி ஹேர் பேக்:

  • பெண்களின் கூந்தலை வலுவாக்கும் ஹேர் பேக் செய்வதற்க முதலில் செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை எடுத்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். செம்பருத்தியைப் பயன்படுத்தும் போது தலைமுடியின் வேரிலிருந்து வளர்ச்சியைத் தூண்டி முடி உதிர்வைத் தடுக்கிறது.

  • அடுத்ததாக தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும் கற்றாழை ஜெல், இளநரையைத் தடுக்க கறிவேப்பிலை, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வெங்காயம் மற்றும் முடி உதிர்வைத் தடுக்க வெந்தயம் போன்றவற்றை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் செம்பருத்தி இலை மற்றும் பூவையும் சேர்த்து அரைத்துக் கொள்வது நல்லது. தற்போது தலைமுடி வலுவாக்கும் செம்பருத்தி ஹேர் பேக் ரெடி.

மேலும் படிக்க: இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? இந்த 5 உணவுகளை அவசியம் சாப்பிடவும்

  • இதை தலைமுடியின் வேரிலிருந்து நுனி வரை தடவி சுமார் அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். இதையடுத்து மிதமான நீரில் தலையை அலசினால் போதும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தலைமுடி உதிர்வைத் தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது.

 Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com