உங்கள் முகத்திற்காக மிகவும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துகிறீர்களா? இனி அதற்கு பதிலாக முல்தானி மிட்டியுடன் பால் சேர்த்து தடவி அழகான சருமத்தைப் பெறலாம்.
முல்தானி மிட்டியை முகத்தில் பயன்படுத்துவது எப்படி: முல்தானி மிட்டி பழங்காலத்திலிருந்தே சருமத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது முடி மற்றும் தோல் ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும். முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது சருமத்தை மேம்படுத்துவதோடு, சரும பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. அதேசமயம் பால் இயற்கையான மாய்ஸ்சரைசராக பயன் படுத்தப்படுகிறது. எனவே இவை இரண்டையும் கலந்து பயன்படுத்தும்போது சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று இந்த பதிவில் அதன் நன்மைகள் குறித்து பார்ப்போம். இந்த பதிவை படித்து பயன்பெறவும்.
சருமத்தை சுத்தம் செய்வது எப்படி?
சருமத்தை சுத்தம் செய்வது என்பது பழைய இறந்த செல்களை அகற்றி தோலை மீளுருவாக்கம் செய்வதாகும். சருமத்தை பராமரிக்க இது மிகவும் முக்கியம். இதற்காக நீங்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினால், அதை உடனே நிறுத்துங்கள். அதற்கு பதிலாக முல்தானி மிட்டி மற்றும் பாலை நீங்கள் பயன்படுத்தலாம். முல்தானி மிட்டி சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு பெயர் பெற்றது. இதில் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள இறந்த சரும செல்கள் நீங்கும்.
இந்த இரண்டையும் கலந்தால் அது இயற்கையான கிளியன்சராக செயல்படுகிறது. இதை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே அடுத்த முறை விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.
முகப்பரு பிரச்சனையை குறைத்தல்
எண்ணெய் பிசுபிசுப்புடன் சருமம் இருக்கும்போது பெண்களின் முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் தோன்றும். முகப்பருவைக் குறைக்க மார்க்கெட்டில் பல ஃபேஸ் வாஷ்கள், ஜெல்கள் கிடைத்தாலும், இயற்கையாகவே இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட முல்தானி மிட்டி மற்றும் பால் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. மேலும் இது சருமத்தில் உள்ள சிறு சிறு துளைகளை நீக்கி, முகப்பரு பிரச்சனையையும் சரி செய்கிறது. அடுத்த முறை உங்கள் முகத்தில் முகப்பரு இருக்கும்போதெல்லாம், எளிதான இந்த வீட்டு வைத்தியத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்களேன்.
சருமத்தை இளமையாக மாற்றுதல்
இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், இளம் வயதிலேயே முகம் வயதான தோற்றத்தில் தெரிகிறது. அதாவது முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. பல பெண்கள் சுருக்கங்களைக் குறைக்க கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையாகவே இந்தப் பிரச்சனையைக் குறைக்க வேண்டுமானால், முல்தானி மிட்டி மற்றும் பாலை கலந்து முகத்தில் தடவலாம். இது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கும், இதன் காரணமாக உங்கள் சருமம் இளமையாகவே இருக்கும்.
பளபளப்பான சருமத்தை பெறுதல்
பெண்களுக்கு தங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற எந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. அதுவும் பெரிய அளவில் பலன்களை தருவதில்லை. நிறமாற்றம் காரணமாக உங்கள் முகம் பொலிவிழந்து காணப்பட்டால், இதற்கு முல்தானி மிட்டி மற்றும் பால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முல்தானி மிட்டி நிறம் மாற்றம் அடைவதையும் ஓரளவு குறைக்கும்.
சரும நிற மாற்றத்தை குறைத்தல்
முல்தானி மிட்டி மற்றும் பால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள், தோல் சிவப்பது போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது. நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்தும் போது, முகத்தில் குளிர்ச்சியை உணரலாம். இதற்குக் காரணம் இதிலிருக்கும் குளிர்ச்சித் தன்மைதான். இது சருமத்தில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation