ஜேட் ரோலரை முகத்தில் பயன்படுத்துவது எப்படி ? ஜேட் ரோலர் உபயோகமான பொருளா ?

பெண்கள் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் ஜேட் ரோலரும் ஒன்று. ஜேட் ரோலர் பயன்கள் என்ன ? முகத்தில் மசாஜ் செய்ய ஜேட் ரோலரை பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.
image

ஜேட் ரோலர் என்பது கைக்கு அடக்கமான மசாஜ் செய்ய பயன்படுத்த கூடிய அழகு சாதன பொருளாகும். இந்த ஜேட் என்பது ஒரு கல் ஆகும். பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும். ஜேட் கல் ஆபரணங்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஜேட் கல் சருமத்திற்கு மிகவும் நல்லதென சமீப காலத்தில் தெரியவந்துள்ளது. பேரழகி கிளியோபாட்ரா காலத்தில் தொடங்கி நூற்றாண்டுகளாக ஜேல் கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானியர்கள் ஜேட் ரோலரை தினமும் முகத்தில் மசாஜ் செய்ய பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஜேட் ரோலர் வைத்து மசாஜ் செய்யும் போது கைகளால் மசாஜ் செய்வது போன்ற உணர்வு கிடைக்கும். ஜேட் ரோலரின் விலை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. இதை நீங்கள் ஆன்லைனில் வாங்கி பயன்படுத்தலாம். ஜேட் ரோலில் ஒரு பக்கமும் பெரிய கல், மற்றொரு பக்கம் சிறிய கல் இருக்கும்.

jade face roller

ஜேட் ரோலர் மசாஜ்

ஜேட் ரோலரை நேரடியாக முகத்தில் மசாஜ் செய்யும் முன்பாக சில எண்ணெய்களை சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது கேரட் விதை எண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு சொட்டு ரோஸ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவ வேண்டும். ரோஸ் எண்ணெய் எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தும். நீங்கள் எண்ணெய்க்கு பதிலாக கற்றாழை ஜெல் கூட பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்ய ஜேட் ரோலர்

  • இந்த ஜேட் கல் குளிர்ச்சி பண்புகளை கொண்டது. எண்ணெய்யை முகத்தில் தடவி ஜேட் ரோலர் உபயோகித்தால் சருமத்தில் எண்ணெய் செலுத்தப்படும்.
  • முதலில் கழுத்து பகுதியில் இருந்த மேல் நோக்கி ரோல் செய்யவும். கழுத்து பகுதியில் ரோல் செய்வதால் கழுத்து கருமை குறையும். 30 முறை ஜேட் ரோலர் ரோல் செய்த பிறகு தாடை பகுதியில் ரோல் செய்யுங்கள்.
  • கீழ் இருந்து மேல் நோக்கி ரோல் செய்வதே சரியான முறை. இப்போது தாடை பகுதியின் இரு புறமும் தலா 20 முறை ரோல் செய்யுங்கள்.
  • அதே போல உதட்டில் இருந்து காது நோக்கி இருபுறமும் தலா 20 முறை ஜேட் ரோல் செய்யவும்.
  • நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் இருந்து வலதுபக்கம் 30 முறையும், இடதுபக்கம் 30 முறையும் ரோல் செய்யவும்.
  • கண்களுக்கு கீழ் ரோல் செய்ய சிறிய ஜேட் கல் பக்கம் மாற்றி பயன்படுத்தவும். மூக்கின் ஓரங்களில் மற்றும் உதட்டு பகுதியில் சிறிய ஜேட் கல் இருக்கும் பக்கமாக ரோல் செய்யவும்.
  • குளிக்க செல்லும் அரைமணி நேரத்திற்கு முன்பாக ஜேட் ரோல் உபயோகிக்கவும். ஜேட் ரோல் பயன்படுத்துவதால் முகம் பளபளப்பாகும். சருமத்திற்கு புத்துணர்வு கிடைக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP