Coffee Hair Treatment : முடிக்கு காபி பொடியை ஒருமுறை அப்ளை செய்து பாருங்கள்.. மேஜிக் நடக்கும்

முடிக்கு காபி தூளை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  காபி தூள் முடிக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தடுகிறது. 

coffe for hair growth in tamil

வயதுக்கு ஏற்ப முடி உதிர்வு ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே கவனித்து அதற்கு சிகிச்சை அளிப்பது மிக மிக முக்கியம். முடி உதிர்வுக்கு பல வகையான தீர்வுகளை மேற்கொள்ளலாம். அதில் ஆகச் சிறந்ததாக உள்ளது காபி பொடி. பலரும் காபி பொடியை முடிக்கு பயன்படுத்தலாமா? என ஆச்சரியத்துடன் கேட்பார்கள். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை உண்மை தான். காபி பொடி முகத்திற்கு பலவிதமான நன்மைகளை செய்வது போல தலைமுடிக்கும் பல நன்மைகளை செய்கிறது. தலைமுடி மற்றும் உச்சந்தலையில் காபியை பொடியை தடவுவது, முடி உதிர்வதை நிறுத்தி மீண்டும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி உதிர்வதை சாதரணமாக நினைக்க வேண்டாம். முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிர தொடங்கி இறுதியில் வழுக்கைக்கு வழிவகுக்கிறது. ஆனால் ஆராய்ச்சியின் படி, காபியில் உள்ள காஃபின் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி உதிர்வதை நிறுத்தவும் உதவுகிறது என நிரூப்பிக்கப்பட்டுள்ளது. காஃபின் ஒரு தூண்டுதலாக இருப்பதால், இது முடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வேகமாக வளரவும், வலுவாகவும், அடர்த்தியான முடி தோற்றத்தைக் கொடுக்கிறது. காஃபின் டையூரிடிக் விளைவைக் கொண்டிருப்பதால், தலைமுடியில் தடவும்போது பளபளப்பான தோற்றத்தை முடிக்கு தருகிறது.

coffe powder

நரைத்த தலைமுடிக்கு சாயம் பூசவோ அல்லது இயற்கையாகவே உங்கள் தலைமுடியின் நிறத்தை கருமையாக்கவோ நீங்கள் விரும்பினால், காபி பொடியை பயன்படுத்துவது அதற்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • காபி தூள் - 2 டீஸ்பூன்
  • ஸ்ப்ரே பாட்டில்

பயன்படுத்தும் முறை

  • காபி பொடியை 2 டம்ளர் வெந்நீரில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
  • ஆறிய பின்பு அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
  • பின்பு இந்த காபி நீரை தலை முழுவதும் ஸ்ப்ரே செய்து, 20 நிமிடம் ஆழமாக மசாஜ் செய்யவும்.
  • உச்சந்தலை முதல் நுனி வரை எல்லா இடத்தில் தெளிக்க வேண்டும்.
  • 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முடியை வாஷ் செய்யவும்.
  • வழக்கம் போல் இல்லாமல் 2 முறை முடியை ஷாம்புவில் அலசி எடுக்கவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP