பெண்கள் அனைவரும் தங்களது முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள நினைப்பதுண்டு. அதிலும் சமீப காலங்களாக கொரியன் பெண்கள் போன்று மாற என்ன செய்ய வேண்டும்? என்னென்ன அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கூகுளில் அதிகளவில் பெண்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். அப்படி என்ன தான் அவர்களிடம் ஸ்பெஷல் விஷயங்கள் உள்ளது? என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியென்றால் ஒரு 5 நிமிடம் நேரம் ஒதுக்கி இந்த செய்தித் தொகுப்பை வாசித்து விட்டு போங்க..
மேலும் படிக்க: கோடைக் காலத்தில் சருமம் பொலிவு பெற வேண்டுமா? அப்ப இதை பாலோ பண்ணுங்க!
பொதுவான பெண்களின் வயதை அவர்களின் முக சுருக்கங்கள் மற்றும் தோற்றத்தை வைத்து கணித்துவிட முடியும். ஆனால் கொரியன் பெண்களின் வயதை யாராலும் சட்டென்று கணித்துவிட முடியாது. இளம் வயது பெண்கள் மட்டுமல்ல, வயதான பெண்களும் இளம் வயது போன்ற தோற்றத்தில் இருப்பார்கள். வயதானால் கூட அவர்களது கன்னத்தில் சுருக்கங்கள் அதிகம் இருக்காது. பளிங்கு போன்று அவர்களது முகம் எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். இதனால் தான் இந்த பெண்களின் முக அழகைப் போன்று நாமும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
இதற்கேற்றால் போல் தான் இணையத்தில் கொரியன் அழகு சாதன குறிப்புகள் வைரலாகிறது. இவர்களில் பெரும்பாலோனார் அழகு நிலையங்களுக்கு செல்வதில்லை. வீடுகளில் உள்ள பொருள்களை வைத்து தான் தங்களது முக அழகை பராமரிப்பதாக வீடியோக்களில் வெளியாகிறது. அப்படியொரு ப்யூட்டி டிப்ஸ் குறித்து தான் இங்கே நாமும் பார்க்க விருக்கிறோம்..
மேலும் படிக்க: அரிசி கழுவும் நீரைப்பயன்படுத்தினால் பெண்கள் அழகாகி விடுவார்களா? எப்படி தெரியுமா?
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com