Skin care in Summer: கோடைக் காலத்தில் சருமம் பொலிவு பெற வேண்டுமா? அப்ப இதை பாலோ பண்ணுங்க!

தக்காளியில் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளதால் சருமத்தைப் பாதுகாப்பிற்கு பேருதவியாக உள்ளது

skin care in summer

கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தோடு சருமத்தை எப்படி பராமரிக்கப் போகிறோம்? என்ற கவலையும், குழப்பமும் நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும். குறிப்பாக பணிக்குச் செல்லக்கூடிய பெண்கள் முதல் சரும பராமரிப்பில் மிகுந்த அக்கறைக் கொண்ட பெணகள் வீடுகளில் அவர்களுக்குத் தெரிந்த சில அழகுக்குறிப்புகளைப் பின்பற்றி தங்களது முகத்தை மிகவும் அழகாக்க விரும்புவார்கள். இதோ இவர்களுக்காகவே சில எளிய அழகுக்குறிப்புகளை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.

summer skin care tips

சரும பராமப்பிற்கான எளிய குறிப்புகள்:

  • காபி தூள் மற்றும் எலுமிச்சை: கோடைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க நீங்கள் காபி தூள் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி பண்புகள், உங்களது சருமத்தை மிகவும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
  • கற்றாழை: சரும பராமரிப்பில் பெண்களுக்கு பக்கபலமாக உள்ள கற்றாழை. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவியாக உள்ளது. கோடைக்காலத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்களாவது மசாஜ் செய்யவும். இவ்வாறு மேற்கொள்ளும் போது முகத்தை எப்போதும் பொலிவபக வைத்திருக்க முடியும்.
  • மஞ்சள்: பெண்களின் முகத்தை அழகாக்கவும், பாக்டீரியா போன்ற தொற்று கிருமிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மஞ்சள் சிறந்த தேர்வாக அமையும். இதில் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகத்தைப் பொலிவாக்குகிறது.
  • வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே தினமும் எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து தேய்த்து வர முயற்சி செய்யவும்.
turmeric ()
  • கோடைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க தேன் மற்றும் தயிரை நீங்கள் உபயோகிக்கலாம். இதில் உள்ள ஊட்டடச்சத்துக்கள் உங்களது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
  • பெண்களின் சரும பராமரிப்பில் முக்கியத்துவம் பெறக்கூடிய இயற்கையான அழகு சாதன பொருள்களில் ஒன்றாக உள்ளது பப்பாளி. இதில் உள்ள எக்ஸ்போலியேட்டர்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுவதோடு பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது.
  • சருமத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், பாதாம் எண்ணெய்யை உபயோகியுங்கள். இது உங்களது சருமத்தைப் சருமத்தை புத்துணர்ச்சியூட்டுவதற்கும் பிரகாசமாக்குவதற்கும் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
  • தக்காளியில் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளதால் சருமத்தைப் பாதுகாப்பிற்கு பேருதவியாக உள்ளது. தக்காளியை நன்றாக நசுக்கி அதனுடன் தேன் சேர்த்து முகத்தை அப்ளை செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
மேலும் படிக்க: நீரிழிவு நோய்க்கு உகந்த இளஞ்சிவப்பு கொய்யா பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

aloe vera face mask

இது போன்ற முறைகளைப் பயன்படுத்தினாலே வெயில்காலத்தில் உங்களது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Image Source - Google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP