Beauty Tips:அரிசி கழுவும் நீரைப்பயன்படுத்தினால் பெண்கள் அழகாகி விடுவார்களா? எப்படி தெரியுமா?

அரிசி நீரை மென்மையான சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்றவும் உதவியாக உள்ளது.

rice water beauty hacks

வீடுகளில் சமைக்கும் போது அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றும் பழக்கம் நம்மிடம் நிச்சயம் இருக்கும். முன்னோர்கள் கூறுவது போன்று வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் பொருள்களில் தான் ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பார்கள். ஆம் அது போன்று தான் நாம் வேண்டாம் என்று கீழே ஊற்றும் அரிசி நீரில் உள்ளது. ஆரோக்கிய நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், சரும பராமரிப்பிலும் அரிசி நீர் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அரிசி நீரை நாம் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தும் போது இயற்கையான தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு மற்றும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும். இதோ எப்படி? என்பது குறித்த முழு விபரம் இங்கே.

rice water for skin

பெண்களை அழகாக்கும் அரிசி நீர்:

  • அரிசி நீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. வெயில் காலத்தில் ஏற்படும் தோல் அழற்சி, கருந்திட்டுகள் மறைய வேண்டும் என்றாலும் தினமும் அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தை நீங்கள் கழுவிக் கொள்ளலாம். இதனால் தான் பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய அழகு சிகிச்சைக்காக இந்த அரிசி கழுவிய நீர் பயன்படுத்தப்படுகிறது.
  • வெயில்காலத்தில் சரும பராமப்பின் போது அரிசி கழுவிய நீரை நீங்கள் டோனராகப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:உடல் எடைக் குறைப்பிற்கு உதவும் கொள்ளு பிரியாணி!

  • தலைமுடி பராமரிப்பிலும் அரிசி கழுவிய நீர் பெண்களுக்கு பேருதவியாக உள்ளது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் தலைமுடி வேர் வரை சேதமடைந்ததைத் தடுக்கிது.
  • பெண்கள் தலைமுடியை அரிசி ஊற வைத்த தண்ணீர் அல்லது அரிசி கழுவிய தண்ணீரைக் கொண்டு அலசும் போது மற்றும் ஹேர் சீரம் போன்று உபயோகிக்கும் போது முடிக்கு பளபளப்பைத் தருகிறது. இதோடு தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
  • அரிசி நீர் பெண்களின் சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
  • நீரேற்றத்துடன் இருந்தால் மட்டுமே முகம் பிரகாசமாக இருக்கும் என்பதால் நீங்கள் தாராளமாக அரிசி நீரைக் கொண்டு முகம் கழுவலாம். இது சருமத்தை நீரேற்றமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இயற்கையான மாய்ஸ்சரைகளாவும் செயல்படுகிறது.
  • அரிசி நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளதால் இவற்றைக் கொண்டு தினமும் முகம் கழுவினால் வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராட முடியும். எப்போதும் இளமையுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
  • அரிசி தண்ணீரை மென்மையான சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்றவும் உதவியாக உள்ளது.
hair growth help of rice water

மேலும் படிக்க:அரிசி சாதம் வடித்த கஞ்சியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

அப்புறம் என்ன? இத்தனை சரும ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள அரிசி நீரை இனி தினமும் பெண்கள் பயன்படுத்தப் பழகிக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP