தலைமுடி விஷயத்தில் பெண்கள் அதிக கவனத்துடன் இருப்பார்கள். முடி பராமரிப்பு மிக மிக அவசியமான ஒன்று. முறையான முடி பராமரிப்பு விஷயங்களை செய்ய தவறினால் முடி உதிர்வு தொடங்கி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் தலைக்கு குளிக்கும் போது தலைமுடியை அலசுவதில் பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வாரத்திற்கு 2 முறை எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
அந்த வகையில் இந்த பதிவில் பெண்கள் தலைமுடியை அலசும் போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து பார்க்க போகிறோம்.
- முடி, ஷாம்பூவை உறிஞ்சும் தன்மை கொண்டது. முடியை அலசும் போது ஷாம்பூவை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு 2 அல்லது 3 முறை தண்ணீரால் முடியை நன்கு அலசுவது நல்லது. இது முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.
- வாரத்திற்கு 2 முறை ஷாம்பூ தேய்த்து தலைக்கு குளித்தால் போதும். தினமும் குளிப்பதை தவிர்க்க வேண்டும். முடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அதிகப்படியான இயற்கை எண்ணெயைபயன்படுத்துங்கள்.
- ஷாம்பூகளில் சோடியம் லாரில் சல்பேட் போன்ற கடுமையான சுத்தப்படுத்திகள் உள்ளன.இவற்றை அடிக்கடி தலைமுடியில் தடவினால் முடி உதிர்தல் ஆரம்பமாகும்.
- உங்கள் தலைமுடியில் 5 நிமிடங்களுக்கு மேல் கண்டிஷனரை ஊற வைக்க வேண்டும்.

- ஷாம்பூவை தலைமுடியில் 5 நிமிடங்களுக்கு மேல் ஊற விடக்கூடாது. இது முடிக்கு வறட்சியை தரும்.
- தலைமுடியை சுத்தமாக வைத்து கொள்ளவும். அழுக்காக இருந்தால் உடனே தலைக்கு குளித்து முடியை சுத்தம் செய்வது அவசியம்.
- இல்லையெனில் பொடுகு பிரச்சனை ஏற்படும். முடி ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்க உச்சந்தலையில் எண்ணெய் தடவவும். அதே போல் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik