herzindagi
face mask tamil skin

Face Mask For Glowing Skin: சருமத்தை பளபளப்பாக மாற்ற இந்த 4 ஃபேஸ் மாஸ்க்குகள் போதும்

இயற்கையான முறையில் சருமத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? இந்த 4 ஃபேஸ் மாஸ்க்குகளை முயற்சி செய்து பாருங்கள்.
Editorial
Updated:- 2023-01-16, 18:16 IST

அழகான, பளபளப்பான சருமத்தை விரும்பாத பெண்கள் உண்டா? விசேஷ நாட்களில் மட்டுமில்லை தினமும் முகம் பிரகாசமாக இருக்க சரும பராமரிப்பு முறைகள் உதவுகின்றன. இதிலும் பகல் மற்றும் இரவு என பிரித்து பலவகையான சரும பராமரிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக, ஃபேஸ் மாஸ்க்குகள் முகம் மற்றும் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இரவு நேரங்களில் இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்தில் போடுவது சருமத்திற்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குகிறது.

இரவில் ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தி விட்டு தூங்க சென்றால், மென்மையான மற்றும் அழகான சருமத்தைப் பெறுவீர்கள். எனவே, இந்த பதிவில் முகம் மற்றும் சருமத்தைப் பளபளப்பாக மாற்ற உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து பார்ப்போம். மஞ்சளை வைத்து இரவு நேர ஃபேஸ் மாஸ்க் தயாரியுங்கள். சரும பராமரிப்பில் மஞ்சள் மேஜிக் போல் செயல்படுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்பு, அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. மஞ்சள் சருமத்தை இயற்கையாக பளபளக்கச் செய்கிறது. பாலுடன் மஞ்சளைச் சேர்த்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

  • பால் – ½ கப்
  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

இரவு நேர ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் முறை

  • முதலில், பாலில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இப்போது காட்டன் பேடை வைத்து முகத்தை சுத்தம் செய்து, அதன் பிறகு இந்த கலவையை முகத்தில் தடவவும்.
  • தூங்க செல்வதற்கு முன் இதை நீக்கி விடவும்.
  • பிறகு முகத்தை தண்ணீரில் அலசவும்.
  • இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

face tips care

தேங்காய் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெயை பயன்படுத்தி இரவு நேர ஃபேஸ் மாஸ்க் தயாரியுங்கள்

தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை நிறுத்தி வைக்க உதவுவது மட்டுமல்லாமல், கொலாஜனை அதிகரிக்கவும் உதவுகிறது. அதே நேரம், தேயிலை மர எண்ணெய் முகப்பருவுக்கு காரணமான கிருமிகளைத் தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • தேயிலை மர எண்ணெய் – 3-4 டீஸ்பூன்
  • இரவு நேர ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் முறை
  • முதலில், தேயிலை மர எண்ணெயை கோல்ட் ப்ரஸ்டு சுத்தமான தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இப்போது முகத்தை சுத்தம் செய்துவிட்டு, இந்த கலவையைத் தடவவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசவும்.
  • இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன் பயன்படுத்தி இரவு நேர ஃபேஸ் மாஸ்க் தயாரியுங்கள்

தேனில் இருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, சருமத்திற்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து அளிக்க இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்:பளபளப்பான சருமத்தை பெற உதவும் கிரீன் டீ இலை!!!

தேவையான பொருட்கள்

  • தேன் – 1 டீஸ்பூன்
  • இரவு நேர ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் முறை
  • முகத்தை சுத்தம் செய்த பின்பு, தேனை முகம் முழுவதும் நன்கு தடவவும்.
  • பிறகு லேசான க்ளென்சர் கொண்டு முகத்தை அலசவும்.
  • இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தவும்.
  • இந்த கலவையை நீர்த்துப் போக செய்ய, தேவைப்பட்டால் வைட்டமின்-E எண்ணெயையும் இதில் சேர்க்கலாம்.

oil face care

கற்றாழை பயன்படுத்தி இரவு நேர ஃபேஸ் மாஸ்க் தயாரியுங்கள்

கற்றாழையில் சருமத்தை மென்மையாக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. எனவே, இது சருமத்தை இயற்கையான முறையில் அழகுப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
  • வைட்டமின்-E காப்ஸ்யூல்கள் - 2

இந்த பதிவும் உதவலாம்:குளிர்காலத்துக்கு ஏற்ற சூப்பர் ஃபேஸ் மாஸ்க்குகள்!!

இரவு நேர ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் முறை

  • கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின்-E காப்ஸ்யூலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு முகத்தை சுத்தம் செய்துவிட்டு, இந்த கலவையை தடவவும்.
  • அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை அலசவும்.
  • வாரத்திற்கு 4 முறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்திற்கு தடவலாம்.

எனவே, நீங்களும் முகம் மற்றும் சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக மாற்ற, இரவு நேரத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தி பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com