குளிர்காலத்தில் சருமம் மிகவும் வறண்டு, பொலிவற்று காட்சியளிக்கும். இதை சரிசெய்ய, குளிர்காலத்தில் சருமத்தை கூடுதலாக கவனிப்பது அவசியம். இதை முறையாக செய்ய தவறும் போது முகத்தில் வறட்சி ஏற்படுகிறது. இந்த சீசனில், பளபளப்பான சருமத்தைப் பெற பல வகையான அழகு கிரீம்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பெண்கள் பலரும் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தியும் நல்ல பலன் கிடைக்கிறதா? என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான்.
ஆனால், அதிக பணத்தை செலவழிக்காமலே குளிர்காலத்தில் சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம். அதற்கு கிரீன் டீ இலை எனச் சொல்லப்படும் பச்சை தேயிலை பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு கிரீன் டீயை பலரும் குடிக்கின்றனர். அதே போல், முக அழகு மற்றும் சருமத்திற்கும் கிரீன் டீ இலையை பயன்படுத்தலாம். பிரபல அழகுக்கலை நிபுணர் ரேணு மகேஸ்வரி, கிரீன் டீ இலையை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை குறித்து இந்த பதிவில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பளபளப்பான சருமத்திற்கு கிரீன் டீ இலைகளால் செய்யப்பட்ட பேக்கை பயன்படுத்தலாம். இதில் சருமத்தைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. கிரீன் டீ இலைகள், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் புள்ளிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
இதுவும் உதவலாம்.இரவில் பயன்படுத்த வேண்டிய பேஸ் பேக்கா? அது என்ன?
குறிப்பு: இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.
ஏற்கெனவே, நீங்கள் சருமப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com