ஸ்பாவிற்குச் செல்லாமல் பெண்களின் உடலையும், சருமத்தையும் ஈஸியாக பராமரிக்கும் முறை!

பெண்கள் ஸ்பாவிற்கு சென்று மசாஜ்கள் செய்யும் போது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உடலை அழகாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். 

glowing skin spa... beauty
glowing skin spa... beauty

இன்றைய பெண்கள் தங்களை அழகாக்கிக் கொள்வதற்கு பெரும் மெனக்கெடுகிறார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் ஸ்பாக்கள் என தங்களால் எது முடியுமோ? அதை செய்ய முயற்சி செய்கின்றனர். அதிலும் தற்போதைய சூழலில் ஸ்பா எனப்படும் சொல் தான் பெரு நகரங்களில் பிரபலமடைந்து வருகிறது. நீர் சிகிச்சையுடன் தொடர்புடைய இந்த சிகிச்சை முறையில் வெப்ப நிரூற்றுகள், முகத்தை அழகுப்படுத்துதல், சேற்றுக்குளியல், மூலிகைக்குளியல், சூடான மெழுகை உடலில் பூசி அவை குளிர்ந்த பின்னதாக அகற்றுதல் போன்ற பல்வேறு முறைகள் ஸ்பா சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் ஸ்பாவிற்கு சென்று மசாஜ்கள் செய்யும் போது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உடலை அழகாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது போன்று ஸ்பா மசாஜ்கள் செய்வதால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அனைவராலும் இதை மேற்கொள்ள முடியாது. இந்நிலையில் ஸ்பாவிற்குச் செல்லாமல் உங்களது உடலையும், சருமத்தையும் அழகாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

spa treatment

ஸ்பாவிற்குச் செல்லாமல் பெண்களை அழகாக்கும் வழிமுறைகள்:

உடலை ஹைட்ரேட்டாக வைத்திருத்தல்:

குளிர்காலம் மற்றும் வெயில் காலம் எதுவாக இருந்தாலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும் போது சருமம் வறண்டு போய்விடும். இதோடு மட்டுமின்றி உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் அனைத்தும் குறைவதோடு தலைவலி, வயிற்று வலி போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் எப்போதும் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம். ஸ்பாவிற்குச் சென்று தான் இதை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தே உடலையும், மனதையும் மகிழ்வுடன் வைத்திருக்கலாம்.

சரிவிகித உணவு:

ஊட்டச்சத்துள்ள உணவுகள் எப்போதுமே உடலுக்கு ஆற்றலைத் தரும். எனவே உடலுக்கு ஆற்றலைத் தரும் விதமாக வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்ற அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு முகத்தைப் பொலிவாக்கவும் உதவியாக உள்ளது.

நல்ல தூக்கம்:

தூக்கமின்மை பல உடல் நலபிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்பதால் நல்ல தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும். முகத்தைப் பொலிவாக்க மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.

மேலும் படிக்க:இளஞ்சிவப்பு நிறத்தில் சருமம் மாறனுமா... இந்த ஜூஸை குடித்தாலே போதுமானது

spa

இதோடு மட்டுமின்றி உங்களது அன்றாட வாழ்க்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்த்தல், மூலிகை தேநீர் அருந்துதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், மன அழுத்தத்தை நிர்வகித்தல், நீராவி குளியல், மற்றும் சர்க்கரை உப்பு போன்றவற்றைக் குறைவாகப் பயன்படுத்துவது போன்ற பழக்கவழக்கங்களில் ஈடுபட வேண்டும். இது போன்ற நடைமுறைகளால் நீங்கள் ஸ்பாவிற்குச் செல்லாமலே உடலையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source - Google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP