herzindagi
multani mitti facepack

Multani Mitti benefits : சருமப் பிரச்சினைக்கு முல்தானி மெட்டியை பயன்படுத்தும் வழிகள்

முல்தானி மெட்டியை பயன்படுத்தி முகப்பருவை சரி செய்ய உதவும் எளிய வழிமுறைகள் உங்களுக்காக 
Editorial
Updated:- 2024-02-24, 20:52 IST

முல்தானி மெட்டியை நீண்ட காலமாக பேஸ் மாஸ்காக பயன்படுத்தும் போது அது முகத்தைத் தெளிவாக்குவதோடு ஆரோக்கியமான சருமத்தையும் அடைய உதவுகிறது. இதனால் நீங்கள் முல்தானி மெட்டியின் நன்மைகளைக் கட்டாயம்  அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முகத்தில் விடாப்படியாக இருக்கும் முகப்பருவை காணாமல் போகச் செய்வதற்கு முல்தானி மெட்டியை உங்கள் சமையலறையில் உள்ள பல்வேறு பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்

முல்தானி மெட்டி மற்றும் வேம்பு

வேம்பு உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைத் தடுக்கும் ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. வேம்பிற்கு வலுவான நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இருக்கின்றன. இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குகிறது. இதனால் நீங்கள் முல்தானி மெட்டியுடன் வேம்பை பயன்படுத்தலாம். இந்த வேம்பு - முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை இரண்டு நிமிடங்களில் தயார் செய்துவிடலாம். சிறந்த பலன்களை அடைய இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

neem

  • நான்கு ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • வேப்பம்பூ தூளை இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
  • இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையை உருவாக்கவும் 
  • இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்களுக்கு விடவும்.
  • இறுதியாகக் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும் மற்றும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.

மேலும் படிங்க குளிர்காலத்தில் அதீத பொடுகு பிரச்சினையா ? கற்றாழையை பயன்படுத்தி கவலையை தீர்த்திடுங்கள்

முல்தானி மெட்டி மற்றும் மஞ்சள்

முகப்பரு மற்றும் தழும்புகளைப் போக்க உங்கள் சமையலறையில் நீங்கள் காணக்கூடிய சிறந்த பொருட்களில் மஞ்சளும் ஒன்று. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முல்தானி மெட்டியுடன் மஞ்சளை சேர்த்தால் உங்கள் சருமம் தெளிவு பெறும். இந்த பேஸ் பேக்கில் தேனும் சேர்க்கலாம். இது வடுக்களை மறைய உதவுகிறது. இதனை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.

turmeric with multani mitti

  • நான்கு ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ளவும்.
  • இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • நான்கு ஸ்பூ  தேன் எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு மென்மையான கலவையைப் பெறும் வரை அனைத்து பொருட்களையும் தேவையான அளவு சேர்த்திடுங்கள்
  • கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்களுக்கு விடவும்.
  • குளிர்ந்த / வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழிவிடுங்கள்.

மேலும் படிங்க குளிர்காலத்தில் முகப் பொலிவை பாதுகாக்க உதவும் ரகசியங்கள்!

முல்தானி மெட்டி மற்றும் தயிர் 

தயிர் முகப்பருவை நீக்குவதற்கும், உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை கரைப்பதற்கும் உதவுகிறது. முல்தானி மெட்டி - தயிர் கலவை உங்கள் முகப்பரு பிரச்சனைக்குச் சிகிச்சையளிக்காது, ஆனால் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும். இந்த பேக் இரண்டு நிமிடங்களில் தயாரித்து விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்வதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெறலாம்.

Yogurt

  • நான்கு ஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • நான்கு ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள் 
  • பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையைப் பெறும் வரை அனைத்து பொருட்களையும் தேவையான அளவு சேர்க்கவும் 
  • கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு விடவும்.
  • குளிர்ந்த / வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழிவிடுங்கள்

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com