Fashion Tips: உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஆடை வண்ணங்கள் எது? சரியான ஆடைகளை தேர்ந்தெடுக்க டிப்ஸ் இதோ

சரும நிறத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், உங்களுக்கு செட் ஆகும் வண்ணங்களில் ஆடைகளை தேர்ந்தெடுப்பதன் மூலமும், உங்கள் இயற்கையான அழகை மேம்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
image

பெண்கள் பெரும்பாலும் அவர்கள் அணியும் ஆடைகளில் கவனம் செலுத்துவது இல்லை. நீங்கள் அழகாகவும் தைரியமாகவும் தெரிய நீங்கள் அணியும் ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ஆடைகளுக்கு சரியான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் முக தோற்றத்திலும் உணர்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடை வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உங்கள் சரும நிறம். உங்கள் சரும நிறத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், உங்களுக்கு செட் ஆகும் வண்ணங்களில் ஆடைகளை தேர்ந்தெடுப்பதன் மூலமும், உங்கள் இயற்கையான அழகை மேம்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் உங்கள் சரும நிறத்தின் அடிப்படையில் சரியான ஆடை வண்ணங்களைத் தேர்வுசெய்ய உதவும் சில சிம்பிள் டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்.

சருமத்தின் நிறத்தைப் புரிந்துகொள்வது:


உங்களுக்கு பொருத்தமான ஆடை வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் படி உங்கள் சரும நிறத்தை தெரிந்து கொள்வது ஆகும். சரும நிறம் பொதுவாக கூல், வார்ம் அல்லது நியூட்ரல் என மூன்று வகைப்படுத்தப்படுகின்றது. கூல் சரும நிறங்கள் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும், வார்ம் சரும நிறங்கள் மஞ்சள் அல்லது தங்க நிறத்திலும், நியூட்ரல் தோல் நிறங்கள் இரண்டின் கலவையை அதாவது மாநிறம் கொண்டுள்ளது. உங்கள் சரும நிறத்தை தீர்மானிக்க, உங்கள் மணிக்கட்டில் உள்ள நரம்புகளைப் பாருங்கள். அவை நீலம் அல்லது ஊதா நிறத்தில் தோன்றினால், உங்களுக்கு கூல் ஸ்கின்டோன் இருக்கலாம். இதுவே பச்சை நிறமாகத் தோன்றினால், நீங்கள் வார்ம் சரும நிறத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் தோல் நிறத்தை தீர்மானிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், நீங்கள் ஒரு நியூட்ரல் (மாநிறம்) தோல் நிறத்தை வைத்திருக்கலாம்.

Skin_under_tones_vein_test_1000_x_300_px_1

கூல் சருமத்திற்கு ஆடைகளின் வண்ணங்கள்:


உங்களுக்கு லேசான சரும நிறம் அல்லது கூல் ஸ்கின்டோன் இருந்தால், நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள வண்ணங்களில் நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள். உங்கள் சருமத்திற்கு மரகத பச்சை, சபையர் நீலம் மற்றும் அமெதிஸ்ட் ஊதா போன்ற நகை வண்ணங்கள் செட் ஆகும். லாவெண்டர் மற்றும் பேபி பிங்க் போன்ற லேசான வெளிர் நிற ஆடைகளும் உங்கள் சரும நிறங்களை பூர்த்தி செய்யும். அதே போல மிகவும் டார்க் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் வண்ணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை உங்கள் சருமத்தை மென்மையாகத் தோற்றமளிக்கும். மஞ்சள், ஆலிவ் பச்சை மற்றும் ஆரஞ்சு பழுப்பு போன்ற வண்ணங்களை தவிர்க்கவும். ஏனென்றால் இந்த வண்ணங்கள் உங்களை டல் ஆக மாற்றிவிடும்.

Blog8_March2_868x

வார்ம் சருமத்திற்கு ஆடை வண்ணங்கள்:


உங்களுக்கு வார்ம் ஸ்கின்டோன் இருந்தால், மஞ்சள் அல்லது தங்க நிற வண்ணங்களில் நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள். உங்கள் சருமத்திற்கு டெர்ராகோட்டா, மஞ்சள் மற்றும் பவளம் போன்ற வண்ணங்கள் செட் ஆகும். குறிப்பாக லைட் கலர்ஸ், நீல நிறத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை உங்கள் சருமத்தை மந்தமாகத் தோற்றமளிக்கும். அதே போல லாவெண்டர், லைட் நீலம் மற்றும் வெள்ளி போன்ற வண்ணங்களை தவிர்க்கவும், ஏனெனில் இந்த நிறங்கள் உங்கள் சரும நிறத்தை இன்னும் டார்க் ஆக தோற்றமளிக்கும்.

மேலும் படிக்க: குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியனுமா? இந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க போதும்

மாநிறம் சரும நிறங்களுக்கு ஆடை வண்ணங்கள்:


உங்களுக்கு மாநிறமான ஸ்கின்டோன் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் நீங்கள் பரந்த அளவிலான வண்ணங்களை ட்ரை செய்ய முடியும். மாநிறம் சரும நிறங்கள் பிரைட் மற்றும் லேசான வண்ணங்களை எளிதாக அணிய முடியும். உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய உங்களுக்கு பிடித்த வண்ணங்களை அணிந்து பாருங்கள். பொதுவாகவே கருப்பு வெள்ளை போன்ற நிறங்கள் உங்களுக்கு சிறப்பாக அமையும்.

a18912e07c2db4a5788650991f5a9bc9

அந்த வரிசையில் உங்கள் சரும நிறத்தின் அடிப்படையில் சரியான ஆடை வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் சிறந்த தோற்றத்தையும் உங்கள் ஆடைகளில் நம்பிக்கையையும் உணர உதவும். நீங்கள் மாநிறமாக இருந்தாலும் சரி வெளிர் நிறத்தில் இருந்தாலும் சரி உங்களுக்கு செட் ஆகும் நிறத்தில் ஆடைகளை அணிந்து பழகுங்கள். அதே போல உங்கள் உடல் சைஸுக்கு ஏற்ற ஆடைகளை வாங்க வேண்டும். டைட்டாகவோ லூசாகவோ ட்ரெஸ் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆடைகள் தான் உங்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்த உதவும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP