ஃபுட் பாய்சன் குணமாக என்ன சாப்பிடலாம்?


Shobana Vigneshwar
13-04-2023, 14:32 IST
www.herzindagi.com

ஃபுட் பாய்சன்

    நுண்ணுயிர்களால் மாசுபட்ட உணவை சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. இதில் இருந்து குணமடைவதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களை இப்பதிவில் படித்தறியலாம்.

Image Credit : freepik

ஆப்பிள் சிடர் வினிகர்

    இதில் உள்ள அல்கலைன் விளைவு வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க உதவும். எனவே ஃபுட் பாய்சன் குணமாக உணவிற்கு முன் ஒரு கப் வெந்நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.

Image Credit : freepik

இஞ்சி

    இஞ்சியில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஃபுட் பாய்சனின் அறிகுறிகளை குறைக்கும். இதற்கு துருவிய இஞ்சியை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, சூடு தணிந்த பின் தேன் கலந்து குடிக்கலாம்.

Image Credit : freepik

தயிர் மற்றும் வெந்தயம்

    தயிரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், வெந்தயத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க உதவுகின்றன. இதற்கு ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் வெந்தயத்தை மெல்லாமல் விழுங்கவும்.

Image Credit : freepik

எலுமிச்சை

    இதில் உள்ள அழற்சி, வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

Image Credit : freepik

வாழைப்பழங்கள்

    வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணமாக கூடியவை. ஃபுட் பாய்சன் குணமாக ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடலாம் அல்லது வாழைப்பழத்தை அரைத்து ஷேக் ஆகவும் குடிக்கலாம்.

Image Credit : freepik

மற்ற உணவுகள்

  • ஆப்பிள்
  • தேன்
  • ஜீரகம்/பெருங்காயம் தண்ணீர்
  • புதினா ஜூஸ்

Image Credit : freepik

குறிப்பு

    ஃபுட் பாய்சன் குணமாக போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் குணமாகும் வரை செரிமான மண்டலத்திற்கு அதிகம் அழுத்தம் கொடுக்காதவாறு மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik