மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்ளும் போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
Image Credit : freepik
வைட்டமின் D அதிகளவில் இருக்கிறது
வைட்டமின் D சத்து அடங்கிய உணவு ஆதாரங்களில் மீனும் ஒன்றாகும். வைட்டமின் D உள்ள மீன்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும்.
Image Credit : freepik
சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
மீன் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மீனில் இருப்பதால் சுவாச பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது.
Image Credit : freepik
மனநல ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வின அறிகுறிகளையும் குறைக்கும். மீனைத் தொடர்ந்து உட்கொள்வது வயதான காலத்தில் ஏற்படும் அல்சைமர் நோய் போன்ற மூளைக் கோளாறுகளையும் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Image Credit : freepik
தூக்கமின்மையை போக்க உதவுகிறது
நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அடிக்கடி மீன் சாப்பிடுவது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது
Image Credit : freepik
தசை வலிமையை மேம்படுத்தும்
மீனில் புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற இரண்டு சத்துக்களும் நிறைந்துள்ளன. தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம் உங்கள் தசைகளின் நிலையை மேம்படுத்தி வலுவாக்குகிறது.
Image Credit : freepik
இரும்பு சத்து குறைபாடை போக்க உதவுகிறது
மீன் என்பது இரும்பின் இயற்கையான மூலமாகும்,உணவில் மீனை சேர்த்துக் கொண்டால் இரும்புச்சத்து குறைபாட்டின் அபாயத்தை குறைக்கலாம்
Image Credit : freepik
கூடுதல் நன்மைகள்
கண்களுக்கு நல்லது
முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
மீனில் கலோரிகள் குறைவாக உள்ளது
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.