இரவு 12 மணியாகியும் தூக்கம் வரலையா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!
Jansi Malashree V
09-04-2024, 23:50 IST
www.herzindagi.com
மெலடோனின் என்பது தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களில் ஒன்றாக உள்ளதால் அதை அதிகரிக்க செய்வதற்கான உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முட்டை:
உங்களுடைய உணவு முறையில் முட்டையை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் உள்ள கால்சியம், புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலை சோர்வடைய செய்யாது. நல்ல தூக்கத்தையும் கொடுக்க உதவியாக இருக்கும்.
பால்:
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் சூடாக பால் காய்ச்சிக் குடிக்க வேண்டும். உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு நல்ல தூக்கத்தையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
ஊட்டச்சத்துள்ள காய்கறிகள்:
வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் அதிகளவில் உள்ளது.
இதோடு ஒட்ஸ், மீன் வகைகள் போன்றவற்றையும் உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் நல்ல தூக்கம் வரக்கூடும்.