உங்களின் இந்த 6 பழக்கங்கள் தான் அசிடிட்டி ஏற்படுவதற்கு காரணம்


Alagar Raj AP
27-09-2024, 17:00 IST
www.herzindagi.com

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

    வயிற்றில் இரைப்பையில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவை ஜீரணிப்பதற்கும், புரதங்களை உடைப்பதற்கும், என்சைம்களை செயல்படுத்துவதற்கும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அளிப்பதற்கு முக்கியமானதாக இருக்கிறது.

அசிடிட்டி

    சில நேரங்களில் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகம் உர்வதியாவது அல்லது வயிற்றின் pH அளவுகளில் ஏற்றத்தாழ்வு ஆகியவை அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிற்று புண்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இப்படி ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

ஒழுங்கற்ற உணவு முறை

    உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகிறது. நீங்கள் சரியான நேரத்தில் உணவை சாப்பிடாதது அல்லது உணவைத் தவிர்ப்பதால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகரித்து அசிடிட்டி அல்லது வயிற்றுப் புண் ஏற்படும்.

சாப்பிட்டவுடன் படுப்பது

    சாப்பிட்டவுடன் படுத்தால் வயிற்றில் ஒரு பகுதியான உதரவிதானம் அல்லது கீழ் உணவுக்குழாய் சுருக்கம், இதனால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மார்பில் பரவி அசிடிட்டியை ஏற்படுத்தும்.

புகைபிடித்தல்

    புகைப்பிடிப்பதால் உதரவிதானம் அல்லது கீழ் உணவுக்குழாய் பலவீனமடைகிறது. இதனால் அமிலம் மிக எளிதாக வெளியேறி நெஞ்சில் சேர்ந்து அசிடிட்டி ஏற்படும்.

சில உணவுகள்

    பொரித்த உணவுகள், காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சாக்லேட்டுகள் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால் அசிடிட்டி வர வாய்ப்புள்ளது.

நடுச்சாமத்தில் சாப்பிடுவது

    நள்ளிரவில் உறங்கும் நேரத்தில் உணவு செரிமானமாகும் அந்த நேரத்தில் சாப்பிடுவதால் உணவு உணவு செரிமானம் தடைபட்டு அசிடிட்டி ஏற்படும்.

மன அழுத்தம்

    நீங்கள் நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகம் உற்பத்தியாகும், உங்கள் செரிமான அமைப்பு மெதுவாக இயங்கும். இதனால் கூட ஒருவருக்கு அசிடிட்டி ஏற்படும்.