பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயின் முக்கிய அறிகுறிகள்
Sanmathi Arun
07-04-2023, 20:11 IST
www.herzindagi.com
தைராய்டு அறிகுறிகள்
பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவது தைராய்டு பிரச்சினையால் மட்டுமே. தைராய்டு நோயின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்
Image Credit : freepik
காரணங்கள்
நம்முடைய வாழ்வியல் மாற்றம், உணவுமுறை, போதிய உடலுழைப்பு இல்லாமை, மரபணு ஆகியவை தைராய்டு வருவதற்கான காரணங்களாக இருக்கிறது. உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையை பின்பற்றினால் தைராய்டு பிரச்சினையை சீராக வைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Image Credit : freepik
தைராய்டின் வகைகள்
தைராய்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன அவை ஹைபோ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு. இதில் பெரும்பாலானோர் அதிகம் பாதிக்கபடுவது ஹைபோ தைராய்டு பிரச்சனையால் தான்
Image Credit : freepik
ஹைபோ தைராய்டு
தைராய்டு சுரப்பி குறைவான தைராய்டு ஹார்மோன்களை சுரக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு இன்னொரு காரணமும் உண்டு. அது உடல் பருமனாலும் ஏற்படுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
Image Credit : freepik
ஹைபோ தைராய்டு அறிகுறிகள்
உடல் எடை அதிகரிக்கும்
இதய துடிப்பு குறைவாக இருக்கும்
அதிக சோர்வு இருக்கும்
மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கும்
முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகும்
மலச்சிக்கல் இருக்கும்
எப்போதும் தூங்க வேண்டும் என்று தோன்றும்
முகம் கொழுத்து இருக்கும்
தொண்டையில் தைராய்டு உருண்டையாக வீங்கி தெரியும்
அதிக குளிர் உணர்வு இருக்கும்
Image Credit : freepik
ஹைபர் தைராய்டு
இதில் தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். எனவே தைராய்டு ஹார்மோன்களை குறைக்க மாத்திரைகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்
Image Credit : freepik
ஹைபர் தைராய்டு அறிகுறிகள்
உடல் மெலிந்து இருக்கும்
இதய துடிப்பு அதிகரிக்கும்
ஒரு வித பய உணர்வு எப்போதும் இருக்கும்
பதட்டம், கை, கால் நடுக்கம் இருக்கும்
அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும்
மாதவிடாய் சரியான முறையில் வராது
உடல் சூடு அதிகமாக இருக்கும்
தூக்கமின்மை
கண் பெரிதாக தெரியும்
Image Credit : freepik
குறிப்பு
இரண்டு வகை தைராய்டால் பாதிக்க பட்டவர்களுக்கும் மாதவிடாய் சுழற்ச்சியில் ஏற்படும் மாற்றம் முக்கிய அறிகுறியாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சிய படுத்தாமல் மருத்தவர் ஆலோசனை அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிவது பாதிப்பை ஏற்படுத்தாது. கருத்தரிக்க முயற்ச்சி செய்பவர்களுக்கு தைராய்டு இருந்தால் கருவுறுதலை தாமதப்படுத்தும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
உலக சுகாதார தினமான இன்று இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.