பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் பெரிய தொப்பையை எளிதாக குறைக்க இப்படி செய்தால் போதும்


Sanmathi Arun
04-05-2023, 12:04 IST
www.herzindagi.com

தொப்பை குறைய

    பிரசவத்திற்கு பின்பு, பெண்களின் வாழ்வில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பல விதமான சிறு சிறு பிரச்சினைகள் உடலில் உண்டாக துவங்கும். அதில் பெரும் பிரச்சினையாக இருப்பது தொப்பை தான்.

Image Credit : freepik

தாய் பால்

    பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தான் தொப்பையை குறைக்க எளிய வழியாகும். தாய்ப்பால் ஊற வேண்டும் என்றால், உடலில் சக்தி தேவை. எனவே பால் கொடுக்கும் போது, உடலில் அதிகப்படியான கொழுப்பு குறைகிறது.

Image Credit : freepik

லேசான உடற்பயிற்சி

    பிரசவத்திற்கு பிறகு உங்கள் தொப்பையை குறைக்க லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இதை செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தொப்பை குறைய தினமும் நடைபயிற்சியும் செய்யலாம்.

Image Credit : freepik

வெந்தய நீர்

    வெந்தயத்திற்கு தொப்பையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. இது பெண்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமன்பாடான நிலையில் வைக்க உதவுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் வெந்தயம் சேர்த்து, அதை கொதிக்க வைத்து குடிக்கவும். இது தொப்பையை குறைத்து விடும்.

Image Credit : freepik

வெந்நீர் மட்டுமே குடிக்கவும்

    குழந்தை பிறந்த பிறகு, எப்போதும் வெதுவெதுப்பான நீரை மட்டுமே குடிக்கவும். இது தொப்பையை குறைக்கும். வயிறோடு சேர்ந்து ஒட்டுமொத உடலையும் குறைக்க உதவும்.

Image Credit : freepik

துணியை வயிற்றை சுற்றி கட்டவும்

    குழந்தை பேறுக்கு பிறகு, வயிற்றை சுற்றி ஒரு பெல்ட் அல்லது ஒரு துணியை கட்டலாம். இது வயிற்றை சுற்றி உள்ள தொப்பையை குறைக்க உதவும். இந்த வழியில் பின்பற்றினால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முதுகு வலியும் நீங்கி விடும்.

Image Credit : freepik

இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு

    இரண்டுமே நம் தொப்பை சதையை குறைக்க ஏற்ற சிறந்த பொருட்கள். இந்த இரு பொருட்களையும் நீரில் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வடிகட்டிய நீரை குடிக்கவும். இதனால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

Image Credit : freepik

கிரீன் டீ

    கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்துவதால் , தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த தீங்கும் நேராது. இதை காலை நேரத்தில் குடிக்கவும், மிக விரைவில் தொப்பை சதை குறையும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik