அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் அதிகம் நேரம் சாக்ஸ் அணிந்தபடியே இருக்க வேண்டியுள்ளது. இப்படி அதிகம் நேரம் சாக்ஸ் அணிவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
பாக்டீரியா தொற்று
அதிகம் நேரம் சாக்ஸ் அணிவதால் கால்களில் வியர்வை படிந்து பாக்டீரியா தோற்று ஏற்பட்டு காலில் புண்கள் வர வாய்ப்புள்ளது.
தூக்கத்தை கெடுக்கும்
சிலர் தூங்கும் போதும் சாக்ஸ் அணிந்து தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இது கால்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தி உங்கள் தூக்கத்தை கெடுக்கும்.
ரத்த ஓட்டம் பாதிக்கும்
நீங்கள் அதிக நேரம் சாக்ஸ் அணிவதால் சாக்ஸின் இருக்கும் காரணமாக ரத்த ஓட்டம் பாதித்து கால்களில் உணர்வின்மை, வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நாற்றம்
அதிக நேரம் சாக்ஸ் அணிவதால் ஏற்படும் வெளிவரும் வியர்வை காரணமாக கால்களில் இருந்து துர்நாற்றம் வெளிவரும். இது மற்றவர்கள் முன் உங்களை சங்கடமான நிலைக்கு தள்ளும்.
வெப்பம் அதிகரிக்கும்
நாள் முழுவதும் சாக்ஸ் அணிந்திருந்தால் கால்களில் வெப்பம் அதிகரிக்கும். அதிக வெப்பம் ரத்த நாளங்களை விரிவடைய செய்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதிக நேரம் சாக்ஸ் அணிபவர்களுக்கு இதை பகிருங்கள். மேலும் இது போன்ற மற்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தை பின்தொடரவும்.