சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்


Alagar Raj AP
01-07-2024, 11:00 IST
www.herzindagi.com

    இன்றைய நவீன உலகில் மொபைல் போன் நம் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. பலரும் சாப்பிடும் போது, தூங்கும் போது, கழிவறையில் கூட மொபைலை பயன்படுத்துகின்றனர். இவற்றில் பல பாதிப்புகள் இருப்பினும் நாம் இந்த பதிவில் சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் குறித்து காண்போம்.

உடல் பருமன்

    சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதால் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தாமல் அதிகம் சாப்பிடுவோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்படும்.

செரிமான பிரச்சனை

    மொபைல் பயன்படுத்திக் கொண்டு சாப்பிட்டால் சரியாக மென்று சாப்பிடாமல் உணவு நேரடியாக வயிற்றுக்குள் செல்லும் இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும்.

திருப்தியின்மை

    உங்கள் மனம் மொபைல் பயன்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் சாப்பிட்டதில் திருப்தி இருக்காது.

குறைந்த வளர்சிதை மாற்றம்

    சாப்பிடும் போது டிவி பார்ப்பது உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும் இதனால் நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும்.

குடும்ப பிணைப்பு குறைகிறது

    பொதுவாக சாப்பிடும் போது குடும்பத்துடன் உரையாடிக் கொண்டே சாப்பிடுவோம். ஆனால் மொபைல் பயன்படுத்திக் கொண்டே சாப்பிடுவதால் கலகலப்பான உரையாடல்கள், குடும்ப பிணைப்பு குறைகிறது.

கவனச்சிதறல்

    சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனச்சிதறல் காரணமாக உணவில் தூசி, பூச்சி இருந்தால் அதை கவனிக்காமல் உண்போம்.