அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்கள், இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!


Shobana Vigneshwar
08-10-2023, 08:00 IST
www.herzindagi.com

உருளைக்கிழங்கு தீமைகள்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான காய்கறி உருளைக்கிழங்கு. இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்…

Image Credit : freepik

சிறுநீரக கல் பிரச்சனை

    அதிகமாக உருளைக்கிழங்கை சாப்பிடுவது பொட்டாசியம் சத்துக்களை அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Image Credit : freepik

சர்க்கரை நோய்

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாக உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ள கூடாது. சில சமயங்களில் இதனால் சர்க்கரை நோய் மேலும் மோசமாகலாம்.

Image Credit : freepik

இதயத்திற்கு உகந்தது அல்ல

    உருளைக்கிழங்கு இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவுகளை அதிகரிக்கின்றன. இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image Credit : freepik

அலர்ஜி

    நீல நிறம் அல்லது முளைகட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடுவது உடலுக்கு நீங்க விளைவிக்கும். இதுபோன்ற உருளைக்கிழங்கை சாப்பிடும்போது அலர்ஜி போன்ற சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Image Credit : freepik

மூட்டு வலி

    மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட்களால் மூட்டு வலி மேலும் அதிகரிக்கலாம்.

Image Credit : freepik

உடல் பருமன்

    உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகளும் கார்போஹைட்ரேட்களும் இருப்பதால், இதை அதிகமாக சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் பருமனால் அவதிப்படுபவர்களும் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தக் கருத்துக்கள் யாவும் பொதுவானவையே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik