அதிக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தானது தான், ஏன் தெரியுமா?
Shobana Vigneshwar
27-03-2023, 11:14 IST
www.herzindagi.com
தண்ணீர்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு இணங்க அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்தானது தான். தண்ணீர் அதிகம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்…
Image Credit : freepik
வாய்வு
அதிக தண்ணீர் குடிப்பதால் வாய்வு தொல்லை ஏற்படலாம். இக்காரணத்தினால் வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
Image Credit : freepik
சிறுநீரகம்
அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் சீரான செயல்முறை பாதிக்கப்படுகிறது. எனவே அதிக தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
Image Credit : freepik
இதயம்
அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் இரத்தம் அதிகரிக்கலாம். இது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலை தொடரும் பொழுது இதய செயலிழப்புக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
Image Credit : freepik
கல்லீரல்
அதிக தண்ணீர் குடிப்பதால் கல்லீரல் பலவீனம் அடையலாம். இதனால் கல்லீரலின் முறையான செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம். இதை தவிர்க்க ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.
Image Credit : freepik
எடை அதிகரிப்பு
அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் சம நிலையாக இருக்கும் எலக்ட்ரோலைட்கள் சீர்குழைந்து, எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
Image Credit : freepik
தண்ணீர் குடிப்பதற்கான சரியான முறை
ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் உணவுக்கு பின் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.