அதிகப்படியான உருளை கிழங்கு உயிரை பறிக்கும் அபாயம் கொண்டது
Sanmathi Arun
17-01-2023, 10:18 IST
www.herzindagi.com
அதிகப்படியாக உருளை கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்க விளைவுகளை பற்றி நாம் இங்கு காணலாம்.
Image Credit : freepik
உயர் இரத்த அழுத்தம்
உருளை கிழங்கை அதிகம் உண்பது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடவும்.
Image Credit : freepik
அசிடிட்டி
உருளை கிழங்கை அதிகமாக சாப்பிடும் போது வயிற்றில் அசிடிட்டி மற்றும் வாய்வு பிரச்சனை உண்டாவது மட்டும் இல்லாமல், ஜீரண கோளாறுகள் ஏற்படும்.
Image Credit : freepik
உடல் எடை கூடுதல்
உருளை கிழங்கில் கார்போஹைட்ரேட்டு இருப்பதால் உடலின் எடையை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் அதிகமாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகரித்து உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.
Image Credit : freepik
மூட்டு வலி
உருளை கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மூட்டு வலி ஏற்படும்.
Image Credit : freepik
இரத்த சக்கரை அளவு அதிகரிக்கிறது
அதிகப்படியாக உருளை கிழங்கை உண்பது இரத்த சக்கரை அளவை அதிகரிக்கிறது. உண்மையில் இதில் உள்ள கிளைசிமிக் குறியீடு, உடலில் உள்ள க்ளூகோஸ் அளவை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டியது அவசியம்.
Image Credit : freepik
முளைத்த உருளையை தவிர்க்கவும்
முளைத்த பச்சை உருளை கிழங்கில் ஆர்சனிக் மற்றும் சொலனைன் ஆகிய ஆல்கலாய்ட்ஸ் இருக்கிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. சாப்பிட்டால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
Image Credit : freepik
உருளையை சாப்பிட ஏற்ற நேரம்
காலை நேரத்தில் உடலில் உள்ள கலோரிகள் அளவு குறைந்து காணப்படும். அதனால் தான், காலை உணவாக உருளையை உண்பது நல்லது. அதே சமயம் தினமும் இதை உட்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.