மழைக்காலத்தில் கொசு கடி பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க


G Kanimozhi
29-07-2025, 10:32 IST
www.herzindagi.com

துளசி

    துளசியை தண்ணீரில் கொதிக்க வைத்து சூடு ஆறியதும், அதை ஒரு பருத்தி பஞ்சால் கை மற்றும் கால்களில் எடுத்து தடவலாம். துளசியில் உள்ள யுஜெனால் எனப்படும் நறுமன எண்ணெய் தோல் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

ஐஸ் கட்டிகள்

    ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுருட்டி கொசு கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் சருமத்தில் எரிச்சல் உணர்வு குறைந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும்

கற்றாழை ஜெல்

    கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவுங்கள். கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் அரிப்பை குறைக்கும்.

எலுமிச்சை சாறு

    எலுமிச்சை சாறு மற்றும் துளசியை அரைத்து கலந்து பூசினால் கொசு கடியால் உண்டான எரிச்சல் மற்றும் வீக்கம் குறையும்.

வாழைப்பழ தோல்

    வாழைப்பழத் தோல் உட்புற கூழை கொசு கடித்து இடத்தில் தேய்த்தால் சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு குறையும்.

வெங்காயம் மற்றும் பூண்டு

    வெங்காயம் மற்றும் பூண்டை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். இதன் கடுமையான நறுமணம் கொசுக்களை அருகில் நெருங்க விடாது.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.