வாகை மலர் மற்றும் வாகை மரத்தின் மருத்துவ குணங்கள் அறிவோம்!


Alagar Raj AP
22-08-2024, 15:00 IST
www.herzindagi.com

வாகை மலர்

    சங்க காலங்களில் வெற்றி பெற்ற போர் வீரர்கள் மற்றும் அரசர்கள் வெற்றியின் அடையாளமாக வாகை மலர் சூடி கொள்வார்கள் என்று தமிழ் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் 'வெற்றி வாகை சூடி வா' என்ற சொல் இன்று வரை வழக்கத்தில் உள்ளது.

வாகை மலரின் மருத்துவ குணங்கள்

    இப்படியான பல பெருமைகளை கொண்ட வாகை மலர் அதன் மருத்துவ நன்மைகளுக்கும் அறியப்படுகிறது. நாம் இந்த பதிவில் வாகை மலர் மற்றும் அதன் மரத்தின் மருத்துவ குணங்களை காண்போம்.

வாதம், பித்தம்

    வாகை மலரை தண்ணீரில் காய்ச்சி தேநீரில் போல் குடித்து வந்தால், வாதம், பித்தம் குணமாகும் என்று கூறப்படுகிறது.

கண் பிரச்சனைகள்

    வாகை மரத்தின் இலைகளை அரைத்து கண்களில் கட்டிக்கொண்டால் கண் வீக்கம், கண் சிவத்தல், கண் வலி போன்ற பாதிப்புகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.

நச்சுக்களை நீக்கும்

    வாகை மலரில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது.

ஈறு பிரச்சனைகள்

    வாகை மரத்தின் வேர் பட்டையை பொடி செய்து பல் துலக்கினால் ஈறு பாதிப்புகள் குணமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பு

    இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லையென்பதால் மருத்துவரின் முறையான ஆலோசனை இல்லாமல் இந்த பதிவில் உள்ள குறிப்புகளை செயல்படுத்த வேண்டாம்.