1 டீஸ்பூன் சுக்கு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் நன்கு கலந்து நெற்றியில் பற்று போட வேண்டும். சைனஸ் தலைவலிக்கு நன்கு உதவும்
Image Credit : freepik
நொச்சி இலை நீராவி
சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு நொச்சி இலை சேர்த்து ஆவி புடிப்பது நல்ல பலன் தரும். மேலும் தலையணை அடியில் நொச்சி இலைகள் வைத்து தூங்குவதும் உதவும்.
Image Credit : freepik
யூக்கலிப்டஸ் ஆயில்
சைனஸ் தொந்தரவால் அவதிபடும் பொழுது ஒரு துணியில் 2 சொட்டு யூக்கலிப்டஸ் ஆயில் ஊற்றி அந்த துணியை முகர்ந்து பார்க்க வேண்டும். இது உடனடி நிவாரணம் தரும். மேலும் கொத்தமல்லி இலைகளை அடிக்கடி முகர்ந்து பார்க்க வேண்டும்.
Image Credit : freepik
மிளகு மற்றும் தேன்
சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு மிளகும் தேனும் சிறந்த மருந்தாக இருக்கும், மிளகை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது மிளகு தூளுடன் தேன் கலந்து சாப்பிடலாம்
Image Credit : freepik
நீராவி பிடிக்கலாம்
நம் நுரையீரலில் மாசு தங்கும் போது அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மூச்சு குழாயின் மூலம் மூச்சு விடுவது சிரமமாகி விடுகிறது. எனவே ஆவி பிடிக்கும் போது அதில் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். அந்த நீராவியானது நம் சுவாசப் பாதையில் அடைத்திருக்கும் கழிவுகளை கறைக்கிறது.
Image Credit : freepik
தேன் சேர்த்து கொள்ள வேண்டும்
தேன் என்பது இயற்கை பொருள். இதில் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்கள் உள்ளது.
Image Credit : freepik
ஆளி விதைகள்
ஆளி விதைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சுவாச மண்டல பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும்
Image Credit : freepik
இஞ்சி மற்றும் மாதுளை சாறுகள்
இஞ்சி சாறு மற்றும் மாதுளை சாறு சம அளவில் எடுத்து, அத்துடன் தேன் கலந்து பருகிவர நாள்பட்ட மூச்சு பிரச்சினைகள் சரியாகிவிடும்
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.