மலச்சிக்கலுக்கு எளிய முறையில் நிரந்தர தீர்வு


Sanmathi Arun
23-01-2023, 10:06 IST
www.herzindagi.com

மலச்சிக்கல் பிரச்சனை

    மலச்சிக்கல் என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் பொதுவான குடல் பிரச்சினைகளில் ஒன்றாகும். நீரிழப்பு, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, போதுமான நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது மற்றும் சில மருந்துகளின் விளைவுகள் மலச்சிக்கலுக்கு மிகவும் பொதுவான காரணங்கள். மலச்சிக்கலை சரி செய்யக்கூடிய உணவுப்பொருட்களை இங்கு காணலாம்

Image Credit : freepik

தண்ணீர்

    போதுமான அளவு தண்ணீர் உடலில் இல்லையென்றால் மலம் கடினமாகி செரிமான பாதை வழியாக சீராக செல்ல முடியாது. எனவே நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image Credit : freepik

உலர் திராட்சை

    உலர் திராட்சையில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது மற்றும் சிறந்த இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றது. தினசரி 4-5 உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

Image Credit : freepik

கொய்யா பழம்

    மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் கொய்யா பழம் நார்ச்சத்துகளால் நிறைந்தது. சிறந்த மலமிளக்கியாகவும், ஆரோக்கியமான குடல் இயக்கத்தை உருவாக்கவும் உதவும்.

Image Credit : freepik

திரிபலா

    ஒரு டீஸ்பூன் திரிபலாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் அல்லது காலை வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து உட்கொள்ளலாம். சிறந்த மலமிளக்கியாகவும், செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக்கவும் உதவுகிறது.

Image Credit : freepik

பேரிக்காய்

    இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மலச்சிக்கலுக்கு குட்பை சொல்ல உதவுகிறது.

Image Credit : freepik

பழங்கள் மற்றும் காய்கறிகள்

    இதில் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களுடன் நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைத் தடுக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image Credit : freepik

ஆமணக்கு எண்ணெய்

    பல நூற்றாண்டுகளாக மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை இரவு தூங்கும் முன் சூடான பாலில் சேர்த்து பருகலாம்.

Image Credit : freepik

சில கூடுதல் குறிப்புகள்

    வாழை பழம், அத்திப்பழம், பாதாம், நட்ஸ்,பருப்பு வகைகள் ,ஓட்ஸ் இவை அனைத்தும் மலச்சிக்கலுக்கு உதவும்

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்

Image Credit : freepik