சீரகப்பொடியின் ஆரோக்கிய நன்மைகள்


sreeja kumar
19-02-2023, 12:56 IST
www.herzindagi.com

சீரக பொடி

    இந்திய மசாலா பொருட்களில் சீரகம் மிக மிக முக்கியமானது. சீரகத்தில் இருந்து அரைக்கப்படும் சீரக பொடியானது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதுமட்டுமில்லை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீரகப்பொடி பயன்படுத்தப்படுகிறது.

Image Credit : freepik

ஜீரண கோளாறு

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குளிர்காலத்தில் ஜீரண கோளாறு பிரச்சனை ஏற்படுவது பொதுவான ஒன்று. அதை சரிசெய்ய வெந்நீரில் 1 டீஸ்பூன் சீரக பொடியை சேர்த்து குடித்தால் செரிமானம் சீராகி ஜீரண கோளாறு பிரச்சனை பறந்து போகும்.

Image Credit : freepik

மலச்சிக்கல்

    1 ஸ்பூன் சீரக பொடியை, நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து குடித்தால் தீராத மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.

Image Credit : freepik

கர்ப்பிணிகளுக்கு நல்லது

    கர்ப்பக்காலத்தில் அடிக்கடி வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனையால் அவதிப்படும் கர்ப்பிணிகள் சீரகப்பொடியை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் போல் தயார் செய்து குடித்தால் வாந்தி குறையும். உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும்.

Image Credit : freepik

நரம்பு தளர்ச்சி

    உடலில் அடிக்கடி நடுக்கம், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனையால் கவலை கொள்பவர்கள் சீரக பொடியை நீரில் கரைத்து அதனுடன் சிறிதளவு கருப்பட்டி சேர்த்து குடித்து வரலாம். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Image Credit : freepik

பசியை தூண்டும்

    இளைஞர்கள், குழந்தைகளுக்கு பசியை தூண்ட சீரகப்பொடி பெரிதும் உதவுகிறது. அதற்கு, சீரகப்பொடியுடன் சுக்கு பொடி, திப்பிலி, மிளகு தூள் சேர்த்து வெந்நீரில் கரைத்து சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்க கொடுக்கவும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik