உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம். நீங்கள் சரிவர தூங்க முடியாமல் தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? அதை சரிசெய்வதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Image Credit : freepik
டீ – காபி அதிகம் குடிக்காதீர்கள்
இரவில் தூங்க சிரமப்படுபவர்கள் டீ – காபி அதிகம் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். முக்கியமாக மாலை நேரத்திற்கு பிறகு டீ - காபியை குடிக்கவே கூடாது.
Image Credit : freepik
பாலில் மஞ்சள் போட்டு குடியுங்கள்
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சூடான பாலை குடிக்கலாம். கூடவே பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது ஜாதிக்காய் பொடியை சேர்த்து குடியுங்கள் நன்கு தூக்கம் வரும்.
Image Credit : freepik
மசாஜ் செய்யுங்கள்
நல்ல தூக்கத்திற்கு மசாஜ் செய்வது சிறந்த முறையாக கருதப்படுகிறது. எனவே தலை முடியை தவிர்த்து கை, கால்களில் கடுகு எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் மன அழுத்தமும் குறைந்து நன்கு தூக்கம் வரும்.
Image Credit : freepik
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் உடல் சோர்வை நீக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் தூக்கமின்மை பிரச்சனையை போக்க பெரிதும் உதவுகிறது.
Image Credit : freepik
மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்
டார்க் சாக்லேட், நட்ஸ், விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இவை ஆழ்ந்த தூக்கத்தை தரவும் தசை வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.
Image Credit : freepik
செர்ரி பழங்களை சாப்பிடுங்கள்
செர்ரி பழங்களில் மெலடோனின் சுரப்பி உள்ளது, இவை உடல் உறுப்புகளை உள்ளிருந்தே சரிசெய்ய உதவுகின்றன. தினமும் தூங்க செல்வதற்கு முன்பு செர்ரி பழங்களை சாப்பிட்டால் போதும் நல்ல தூக்கம் கிடைக்கும்.
Image Credit : freepik
புத்தகம் படியுங்கள்
இதை எல்லாம் தாண்டி தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தூங்குவதற்கு முன் ஏதாவது நல்ல புத்தகத்தைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல தூக்கத்தை பெற்று தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்யலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.