தினமும் 30 நிமிடங்கள் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்களும் நன்மைகளும்!


Sanmathi Arun
09-05-2023, 07:00 IST
www.herzindagi.com

நடைபயிற்சியின் நன்மைகள்

    நடைபயிற்சி தசைகள், மூட்டுகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. தினமும் அரை மணி நேரம் நடந்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி படித்தறியலாம்.

Image Credit : freepik

எலும்புகள் வலுவாக இருக்கும்

    தினமும் காலை, மாலை என அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால், உடலின் எலும்புகள் வலுவடையும்.

Image Credit : freepik

ஆற்றலை அதிகரிக்கிறது

    தினசரி நடைப்பயிற்சி ஆக்ஸிஜன் மற்றும் ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது நோர்பைன்ப்ரைன் மற்றும் எபிநெஃப்ரின் போன்ற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது.

Image Credit : freepik

இரத்த சர்க்கரையை குறைக்கிறது

    சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரையை குறைக்கிறது. இதனுடன், செரிமானம் மேம்படும். குறிப்பாக உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Credit : freepik

கலோரிகள் எரிக்கப்படுகின்றன

    தினமும் அரை மணி நேரம் நடப்பதன் மூலம் இடுப்பை ட்ரிம் செய்யலாம். வேகமாக நடப்பது கலோரிகளை எரிக்கிறது, இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Image Credit : freepik

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

    நடைபயிற்சி இதயத்தை வலிமையாக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. எனவே, தினமும் நடக்க வேண்டும்.

Image Credit : freepik

பதற்றம் குறைகிறது

    கவலையிலிருந்து விடுபட, தினமும் சிறிது நேரம் நடக்க வேண்டும். இது மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் கவலயை குறைக்க உதவுகிறது.

Image Credit : freepik

முதுகு வலி குறைகிறது

    தினமும் காலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால் முதுகு வலி குறையும். உங்களுக்கும் முதுகு வலி இருந்தால், தினமும் நடக்க வேண்டும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik