தேங்காயில் தாமிரம், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், நல்ல கொழுப்புகள் மற்றும் துத்தநாகம் ஆகியவை மிக அதிகமாக உள்ளது. தேங்காயை பச்சையாக மென்னு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு காணலாம்.
Image Credit : freepik
மலச்சிக்கலை தீர்கிறது
மலச்சிக்கல் நார்ச்சத்து குறைந்த உணவை உட்கொள்வதின் விளைவாகும் தேங்காயில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் பச்சையாக சாப்பிடும் போது குடல் ஆரோக்கியம் மற்றும் குடல் இயக்கம் கட்டுக்குள் வைக்க உதவுகிறது,மலச்சிக்கலை தீர்கிறது.
Image Credit : freepik
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தேங்காயில் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், அனைத்து விதமான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கிறது.
Image Credit : freepik
வாய் பிரச்சனைகளை தீர்கிறது
தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் பால் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள், வாய் புண் போன்ற பிரச்சனைகளை தீர்கிறது. தேங்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கூட வாய் தொற்றுக்கு மற்றும் பொதுவான தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது.
Image Credit : freepik
உடல் எடையை குறைக்க உதவுகிறது
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சிற்றுண்டிக்கு பதிலாக தேங்காய் சாப்பிடுவது சிறந்தது.இது தேவையான சத்துக்களை அளித்து வயிற்றை நிரம்ப செய்து பசி உணர்வை தடுக்கிறது. இவ்வாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
இதயத்திற்கு நல்லது
தேங்காய் பச்சையாக சாப்பிடும் போது நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைகிறது , இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதய நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையோட எடுத்து கொள்வது சிறந்தது .
Image Credit : freepik
அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது
நியூட்ரியண்ட் என்ற புகழ்பெற்ற பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில் தேங்காயில் இருக்கும் கெட்டோஜெனிக் பண்புகள் இந்த நியூரோடிஜெனரேட்டிவ் பிரச்சனைக்கு எதிராக போராடுவதாக கூறபடுகிறது. தொடர்ந்து உட்கொள்வது அல்சைமர் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
Image Credit : freepik
சில கூடுதல் குறிப்புக்கள்
தேங்காய் இரத்தத்தை சுத்திகரிக்கும்
முற்றாத தேங்காய்களில் புரோட்டீனும் குளுகோஸும் அதிகமாக இருக்கிறது
தேங்காயில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது.
வயிற்று புண் அல்சர் இருப்பவர்கள் தேங்காயை பால் எடுத்து குடிக்கலாம்
உடல் சூடை குறைக்க உதவும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.