கோழிக்கறியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும்.
Image Credit : freepik
எலும்புகள் பலமடையும்
கோழிக்கறியில் கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை எலும்புகளை பலமாக்க உதவுகிறது.
Image Credit : freepik
அமினோ அமிலங்கள் நிறைந்தது
கோழிக்கறியில் உள்ள அமினோ அமிலங்கள் தசைகளை வலுவடைய செய்கிறது. தசைகளுக்கு போதுமான ஆற்றலை தருகிறது.
Image Credit : freepik
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
2008 ஆம் ஆண்டில், வேளாண் மற்றும் உணவு வேதியியல் இதழ், சிக்கன் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் கோழி உணவை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image Credit : freepik
உடல் எடையை குறைக்க உதவுகிறது
கோழிக்கறியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனால் கறி சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். எனவே அதிக உணவு சாப்பிட பிடிக்காது. இதன் மூலம் உடல் எடை குறையும்
Image Credit : freepik
மன அழுத்தம் நீங்குகிறது
இதில் செரடோனின் உள்ளது. இதனால் மனம் அழுத்தம் நீங்கி, அமைதியாக இருக்கும். மன அமைதியை தரும்
Image Credit : freepik
கொழுப்பை கரைக்கிறது
கோழிக்கறியில் குறைந்த கொழுப்பு, குறைந்த கொலஸ்ட்ரால் உள்ளது. இதில் நியாசின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லது. இதனால் இதயத்திற்கு நன்மை தருகிறது
Image Credit : freepik
குறிப்பு
நாட்டுகோழி சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும். சிக்கனை அளவாக வாரம் ஒரு முறை சாபிட்டாலே போதுமானது.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.