சீதா பழத்தின் சிலிர்க்க வைக்கும் நன்மைகள்


Sanmathi Arun
17-02-2023, 20:43 IST
www.herzindagi.com

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    சீதாப்பழத்தில் உள்ள லுடீன் கண்களில் காணப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் மூலம் கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற நோய்களைத் தடுக்கிறது.

Image Credit : freepik

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

    பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சீதாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கின்றன மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களைத் தடுக்கின்றன.

Image Credit : freepik

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது

    சீதாப்பழத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் மீது எபிகாடெச்சின் விளைவு பற்றிய ஒரு ஆய்வு , சிறுநீர்ப்பையில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்த உதவுகிறது என்பதை நிரூபித்தது.

Image Credit : freepik

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

    சீதாப்பழத்தில் வைட்டமின் C அதிகம் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

Image Credit : freepik

ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது

    சீதாப்பழத்தில் வைட்டமின் B6 நிரம்பியுள்ளது, இது மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும். வாரம் இருமுறை சாபிட்டாலே போதுமானது.

Image Credit : freepik

மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

    இதில் B6 அதிகம் உள்ளது. வைட்டமின் B6 சில முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு பொறுப்பாகும். உங்கள் மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் மனநிலை மாற்றங்களைக் குறைக்கவும், மனச்சோர்வைக் குறைக்கவும் சீத்தாப்பழம் உதவும்.

Image Credit : freepik

சீதாப்பழம் சாப்பிட சிறந்த நேரம்

    சீதாப்பழத்தை கட்டாயம் இரவு நேரங்களில் சாப்பிட கூடாது. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிடுவதே சிறந்தது.

Image Credit : freepik

முக்கிய குறிப்பு

  • கர்ப்பிணிகள் தினசரி உட்கொள்ள கூடாது
  • கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்கள் குறைந்த அளவவில் சாப்பிட வேண்டும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik