குளிர்காலத்தில் ஜில் தண்ணீரில் குளித்தால் கிடைக்கும் நன்மைகள்


Alagar Raj AP
11-11-2024, 12:31 IST
www.herzindagi.com

    பண்டைய கிரேக்கர்கள், ரஷ்யர்கள் முதல் தற்போதைய விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் வரை அனைவரும் குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலுக்கு குறிப்பிடத்தக்க சில நன்மைகள் உள்ளது.

இரத்த ஓட்டம் மேம்படும்

    குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தம் ஓட்டம் அதிகரித்து சரியாக இயங்கும்.

சுறுசுறுப்பை அளிக்கும்

    காலை குளிர்ந்த நீரில் குளிப்பதால் சருமத்தை தளர்வடைய செய்யும் மற்றும் சுவாசத்தின் வேகத்தை அதிகரிக்கும். இதன் விளைவாக நம் உடல் அதிக ஆக்ஸிஜனை உள்ளிழுத்து நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.

நோயெதிர்ப்பு சக்தி

    குளிர்ந்த நீர் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாடு அதிகரிக்கும். இதனால் குளிர்காலத்தில் ஏற்படும் நோயை எதிர்த்து போராடும் திறன் அதிகரிக்கும்.

சருமம் மற்றும் கூந்தல்

    கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் தூசியை குளிர்ந்த நீர் அகற்ற உதவுகிறது. மேலும் குளிர்ந்த நீரானது குளிர் காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை குறைக்கிறது.

தசை வலிக்கு நிவாரணம்

    குளிர்ந்த நீர் தசை வலியை போக்க உதவுகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் தசைகள் தளர்வடைந்து தசை வலி குறையும்.

மனநிலை மேம்படும்

    குளிர்ந்த தண்ணீர் உடலில் டோபமைன் மற்றும் செரோடோனின் அளவை மேம்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைந்து தெளிவாக உணர்வீர்கள்.

குறிப்பு

    குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும் என்பதால் ஒரேயடியாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முதலில் பாதங்களிலிருந்து ஊற்ற தொடங்குங்கள். மேலும் காய்ச்சல், சளி, இருமல், இதய நோய், உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கவும்.