முகத்தில் தொங்கும் சதையை சரிசெய்யும் உடற்பயிற்சிகள்


sreeja kumar
31-01-2023, 10:29 IST
www.herzindagi.com

முகத்தில் தொங்கும் சதை

    சற்று உடல் பருமன் அதிகம் இருக்கும் பெண்கள், தைராய்டு பிரச்சனை உள்ள பெண்களின் முகத்தில் சதை சற்று அதிகமாக தெரியும். இது கன்னத்தின் தாடை பகுதியில் சதை தொங்குவது போன்ற பிம்பத்தை தரும். இதை சரிசெய்ய சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

Image Credit : freepik

முக பயிற்சி

    இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முகத்தை இடதுபுறமாக மெதுவாக சுற்ற வேண்டும். அதே போல் வலதுபுறமாக சுற்றி மேலும் கீழும் பார்க்க வேண்டும். இந்த பயிற்சி முகத்தில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும்.

Image Credit : freepik

சைக்கிளிங்

    தினமும் காலையில் நேரத்தில் சைக்கிளிங் செல்வது உடல் கொழுப்பை குறைக்க உதவும். அதே போல் சைக்கிளிங் செய்யும் போது முகத்தில் வடியும் வேர்வை தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி முகத்தில் இருக்கும் சதைகளை குறைக்கும்.

Image Credit : freepik

வாயில் மெல்லுவது போன்ற பயிற்சி

    வாயில் சூயிங்கம் அல்லது எதாவது ஒரு பொருளை போட்டு மெல்லுவது போன்ற பயிற்சியை செய்வது நல்ல பலனை தரும். தினமும் காலை நேரத்தில் தரையில் நிமிர்ந்து உட்கார்ந்து வாயில் மெல்லுவது போன்ற பயிற்சியை செய்தால் தாடையில் இருக்கும் சதை குறையும்.

Image Credit : freepik

உதடுகளை குவிக்கும் பயிற்சி

    மீன் போல் உதடுகளை குவித்து 20 வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்பவும். தினமும் இந்த பயிற்சியை முறையாக செய்தால் கன்னம் சீராக மாறி முகத்தில் இருக்கும் தேவையற்ற சதைகள் குறையும்.

Image Credit : freepik

சிரிப்பு பயிற்சி

    முகத்தில் இருக்கும் சதைகளை குறைக்க சிரிப்பு பயிற்சி பெரிதும் உதவுகிறது. தினமும் குறைந்தது 20 நிமிடம் சிரிப்பு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கொழுப்பை கரைக்கலாம்.

Image Credit : freepik

உணவு முறை

    முகத்தில் அதிகம் சதை சேர உணவு முறையும் முக்கிய காரணமாக உள்ளது. உப்பு நிறைந்த உணவுகள், பாஸ்புட் உணவுகள், குடி பழக்கம், அதிக தூக்கம் ஆகியவையும் முகத்தில் கொழுப்பை சேர்கின்றன.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik