தினமும் 20 நிமிடம் கைதட்டுங்க பாஸ்.. இதெல்லாம் கிடைக்கும்!
Alagar Raj AP
17-04-2024, 10:00 IST
www.herzindagi.com
கிளப்பிங் தெரபி
கிளப்பிங் தெரபி அதாவது கைதட்டுவதால் நம் உடலுக்கு சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அது என்ன நன்மைகள் மற்றும் எப்படி கைதட்ட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கிளப்பிங் தெரபி எப்படி செய்வது
வஜ்ராசனம் அல்லது பத்மாசன நிலையில் அமர்ந்து இரண்டு கைகளையும் ஒரே இணையாக நீட்டி கைதட்ட வேண்டும். இவ்வாறு தினமும் காலை, மாலை 20 நிமிடம் செய்ய வேண்டும்.
கைதட்டும் போது உடலில் உருவாகும் நேர்மறை ஆற்றல் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பி உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்பட செய்கிறது. இதனால் மன அழுத்தம் குறைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அடர்த்தியான முடி
கைதட்டும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். இதனால் தலையில் முடி உதிர்வது நின்று முடி அடர்த்தியாக வளரும்.
இதய ஆரோக்கியம்
கைதட்டுவதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்பட்டு இதய தசைகளின் அழுத்தத்தை குறைக்கிறது. இதன் காரணமாக இதயம், சுவாச நோய்களை நீக்கப்படுகிறது.
நினைவாற்றல் அதிகரிக்கும்
குழந்தைகள் இந்த கிளப்பிங் தெரபியை செய்தால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும்.