பானி பூரி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Alagar Raj AP
25-06-2024, 15:51 IST
www.herzindagi.com
பொதுவாக பானி பூரி சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று கூறப்பட்டாலும் பானி பூரியில் சேர்க்கப்படும் உருளைக்கிழங்கு, புளி, வெங்காயம், கொண்டைக்கடலை மற்றும் மசாலா பொருட்கள் சில நன்மைகளை தரக்கூடியது. இப்படி பானி பூரி முழுவதுமாக அளிக்கும் நன்மைகளை பார்ப்போம்.
செரிமானத்திற்கு நல்லது
பானி பூரியின் இராசத்தில் சேர்க்கப்டும் சீரகம் உள்ளிட்ட மசாலா பொருட்களின் கலவையானது செரிமான நொதிகளை தூண்டி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
பானி பூரியின் ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, இஞ்சி, சீரகம் போன்ற மசாலா பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும்
ஒரு பானி பூரியில் கிட்டத்தட்ட 36 கலோரிகள் இருக்கும். நீங்கள் சராசரியாக ஆறு பானி பூரிகளை சாப்பிட்டால் 216 கலோரிகள் இருக்கும், இது வெறும் இரண்டு சப்பாத்திக்கு சமம் என்பதால் உடல் எடையை குறைப்பவர்கள் அளவாக பானி பூரி சாப்பிடலாம்.
சளி இருமல் நிவாரணம்
பானி பூரியின் ரசத்தில் சேர்க்கப்படும் புதினா இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
வயிறு நிறைந்த உணர்வு
பானி பூரியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு நார்ச்சத்தின் ஒரு நல்ல மூலமாக இருக்கிறது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்
வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்களை பானி பூரி வழங்குகிறது.