ஒரே மாதத்தில் மெலிதான உடல் அழகு பெற சூப்பர் டிப்ஸ்
Shobana Vigneshwar
25-02-2023, 24:40 IST
www.herzindagi.com
உடல் எடை
அதிகரிக்கும் உடல் எடையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ள 7 குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாகவும் வசீகரமாகவும் மாறலாம்.
Image Credit : freepik
காலையில் எழுந்ததும் தண்ணீர்
காலையில் டீ, காபி குடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். இது உங்கள் உடலை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கும். காலையில் தண்ணீர் குடிப்பது, மூளை மற்றும் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.
Image Credit : freepik
நிறைவான காலை உணவு
காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். அதே சமயம், ஆரோக்கியமான காலை உணவைச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
Image Credit : freepik
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு
முழு தானியங்கள், பருப்பு வகைகள், பயறு வகைகள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராது.
Image Credit : freepik
தினமும் ஒரு பழம்
தினமும் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கத்தை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
Image Credit : freepik
உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி, யோகா, படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் மற்றும் நீட்சி பயிற்சி செய்யுங்கள். இவை அனைத்தும், உடலின் தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுன்றி உடலையும் நெகிழ்வாக மாற்றுகின்றன.
Image Credit : freepik
கிரீன் டீ
உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க டீ, காபிக்கு பதிலாகக் கிரீன் டீயை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும்.
Image Credit : freepik
சீரகத் தண்ணீர் குடிக்கவும்
காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடிக்கலாம். இதன் மூலம் அதிகரித்து வரும் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம். சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த உதவி குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடலை மெலிதாக வசீகரமாக மாற்றலாம். இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.